கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை, மார்ச்.23
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தி யது.
உலக புவி தினம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்று காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையம் ஜவகர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
தண்ணீரை சிக்கனமாக
பயன்படுத்துவது குறித்தும்
வன உயிரினங்கள் குறித்தும்,
மரம் மற்றும் செடிகள் குறித்து வனக் கல்லூரி மாணவ மாணவிகள்
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதே அரங்கில்
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்
என்று வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்களும், மாணவ மாணவிகளும்
கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மேட்டுப்பாளையம் கிளையின் சார்பாக
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.