உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் இன்று
புனித வெள்ளி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியான சைதாப்பேட்டையிலுள்ள சி.எஸ்.ஐ.மீட்பர் ஏசு ஆலையத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது…
புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் கடவுள் இயேசு அனுபவித்த துன்பங்களையும் சிலுவைலையில் அறைவதையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுஷிட்டிக்கப்படுகிற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டுகளில் மிகவும் முக்கியமானதாத கருதப்படும் இந்த புனித வெள்ளி இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்)கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழ்வாகும்
இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அனுஷிடிக்கப்படுகிறது…..
புனித வெள்ளியை முன்னிட்டு சைதாப்பேட்டையில் உள்ள இயேசு மீட்பர் தேவாலயத்தில் பேராயர்கள் தலைமையில் இவ்விழாவிற்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது..
இந்த சிறப்பு நிகழ்வில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 500ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்….
இச்சிறப்பு பிராத்தனையில் ஆயர் அறிவர் டபிள்யூ . தாமஸ் , இம்மானுவல் ரெக்ஸி , கிறிஸ்டோபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்…