இலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்
இலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காம கோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை சார்பில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 அறுவை சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளர் என்.ராம், தொழிலதிபர் ஏ சி முத்தையா, இம்மருத்துவமனை தலைமை நிர்வாகி திரு சந்திரமோகன், இயக்குனர் மருத்துவர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவ குழுவினர் களுக்கும் மருத்துவர்களுக்கும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
என். ராம் மேடை பேச்சு:
இந்த இலவச அறுவைச்சிகிச்சை சிகிச்சை முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. இது, மற்ற மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. இலவச மருத்துவ சிகிச்சைக்காக பலர் நன்குடை அளித்துள்ளனர்.
மருத்துவத்துறையில், இந்தியா மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். வங்க தேசம் போன்ற தென் கிழக்கு நாடுகள், மருத்துவ துறையில் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவில், வட இந்தியாவை விட, தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழகம், மருத்துவத்தில் நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும், அவ்வப்போது, புகர்கள் வந்தவண்ணம் தான் உள்ளன.
மருத்துவர்கள், கிராமங்களுக்குச் சென்று மருத்துவ உதவி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு, நிறைய மருத்துவமனைகள் தேவை.
இந்தியாவில் சுகாதாரத்திற்கென போதுமான நிதி ஒதுக்குவதில்லை.. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒதுக்கப்படுவதில்லை.
இம்மருத்துவமனை தலைமை நிர்வாகி திரு சந்திரமோகன் பேசுகையில் இந்த அறுவை சிகிச்சைக்கு மிகவும் வசதியற்ற குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை செய்யப் பட்டதாகவும் மேலும் மேலும் இந்த மருத்துவ சிகிச்சை தொடரும் என்றும் இதற்காக மருத்துவக் குழு அமைத்து வசதி வசதியற்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்,மேலும் காஞ்சி பரமாச்சாரியா அறிவுரையின்படி மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் அடங்கிய குழுவினர் நாள்தோறும் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் சிகிச்சை தேவைப்படுவேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மட்டும் மருந்துகளை இலவசமாக வழங்கி வருவதாகவும் இவர்களுக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனைத்து சிகிச்சையை இலவசமாக செய்து வருவதாகவும் இதுவரை சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்
மேலும் கூடுதலாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது ஓராண்டு சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் 85 சதவீதத்தினர் குணமடைகின்றனர் என்று கூறினார் இதைமேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இங்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிப்பதாகவும் அவ்வாறு உள்ளவர்கள் நேரடியாக எங்கள் மருத்துவமனை தொடர்பு கொண்டு அழைத்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்,
மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் பேசுகையில் அனைத்துக் குழந்தைகளின் நலன்களிலும் அக்கறை செலுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம் மருத்துவமனை கடந்த 40 வருடங்களாக எந்தவித லாப நோக்கம் இல்லாமல் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அவசர சிகிச்சை அவசர அறுவை சிகிச்சையின் போது இங்கு வரும் நோயாளிகளிடம் எந்த முன்வைப்புத் தொகை எதுவும் பெறுவதில்லை என்றும் உடனடியாக தங்கள் மருத்துவ சிகிச்சை தொடங்கப் பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும் அங்கு வரும் நோயாளிகளின் பொருளாதார நிலையை அறிந்த பின்னர் சலுகை கட்டணத்தில் அல்லது இலவசமாக சிகிச்சை அளித்து வருவதாகவும்