தாயின் கர்பப்பையில் 24 வாரங்கள் மட்டுமே இருந்து முன்கூட்டியே பிறந்த இரு குழந்தைகள், உயிர்பிழைத்து சொல்லும் வெற்றிக்கதை
கருவுற்றதிலிருந்து 23-24 வாரங்கள் என்ற இரண்டாவது பருவத்தின்போதே குறைப்பிரசவத்தில் பிறந்த இரு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட வெற்றிகரமான சிகிச்சையை ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலில் டாக்டர் ராகுல் யாதவ் தலைமையிலான பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று உலகிற்கு வெளிப்படுத்தியது. இக்குழந்தைகள் பங்களாதேஷைச் சேர்ந்த இரு பெண்களுக்கு (திருமதி. துனியா கண்டோகர் மற்றும் திருமதி பாத்திமா) பிறந்தவையாகும்.
இக்குழந்தைகள், வேறு மருத்துவமனைகளில் பிறந்த பிறகு, தீவிர பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு பிரிவில் சிகிச்சைப் பெறுவதற்காக மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலுக்கு அவசரமாக அழைத்து வரப்பட்டிருந்தனர். கடந்த காலத்தில் குறை மாதத்தில் குழந்தைகளைப் பெற்றிருக்கும் இந்த தாய்மார்களுக்கு, பிரசவத்திற்கு முந்தைய நிலையில் சவ்வு கிழிதல் ஏற்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே குறைபிரசவம் இவர்களுக்கு ஏற்பட்டது.
கருவுற்றதிலிருந்து 23-24 வாரங்கள் என்ற காலஅளவிற்குள்ளே பிறந்த இக்குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் அதிக சிரமம் இருந்தது மட்டுமின்றி, ஊன்பசை சருமம் மற்றும் உரிய வளர்ச்சி பெறாத குடல் ஆகிய பிரச்சனைகளும் இருந்தன. முறையே 480 கிராம் மற்றும் 600 கிராம் என்ற குறைந்த எடையைக் கொண்டிருந்த இக்குழந்தைகளுக்கு விரிவான மருத்துவ கண்காணிப்பும் மற்றும் அவைகள் உயிர்பிழைத்து இயல்பான குழந்தைகளாக ஆவதற்கு 24ழூ7 தீவிர சிகிச்சை ஆதரவும் தேவைப்பட்டது.
அறிவியல்பூர்வமாக பார்க்கையில், 23-24 வாரங்கள் என்ற கர்ப்;பகாலத்தின் இரண்டாவது பருவத்தில் பிறக்கின்ற குழந்தைகள் உயிர்பிழைக்கின்ற வெற்றி விகிதமானது, மிக அரிதாகவே இருக்கிறது. ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலில் பிள்ளை பிறப்பு மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் தலைமை நிபுணர் டாக்டர். ராகுல் யாதவ் மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் முதுநிலை மருத்துவர்கள் டாக்டர். ஷோபனா ராஜேந்திரன் மற்றும் டாக்டர் அருண்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு, வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் செயற்கை சுவாச சாதனத்தை பயன்படுத்தி பிறந்த குறைப்பிரசவ குழந்தைகள் சுவாசிக்க உதவி, ஒரு இரட்டை சுவர் கொண்ட இன்குபேட்டரில் வைத்து சிகிச்சையளித்தனர்.
இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து கருத்து தெரிவித்த பிள்ளை பிறப்பியல் மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ராகுல் யாதவ், ‘இந்த இரு குழந்தைகளும் எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது அக்குழந்தைகள் உயிர் வாழும் என்ற நம்பிக்கை அந்த தாய்மார்களுக்கு இல்லை
இந்த இரு குழந்தைகளும் கருவுற்ற 24 வாரத்தின் இறுதியில் பிறந்துவிட்டன. சுவாசிப்பு சிரமம் மற்றும் உரிய வளர்ச்சியடையாத குடல் ஆகிய பிரச்சனைகள் இக்குழந்தைகளுக்கு இருந்தன. பாத்திமா என்ற பெண்ணின் கர்பப்பையில் இரு குழந்தைகள் இருந்தன. பிரசவத்திற்குப் பிறகு ஒரு குழந்தை உயிரிழந்துவிட்டது. துனியா என்ற பெண்ணும் கருவில் இரு குழந்தைகளை தாங்கியிருந்தார். ஒரு குழந்தையானது கர்ப்பப்பையிலேயே உயிரிழந்துவிட்டதால், சிசேரியன் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த இரு குழந்தைகளும் இம்மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது அக்குழந்தைகளின் உடல் எடை முறையே 600 கிராம் மற்றும் 480 கிராம் மட்டுமே. குழந்தைகள் நிலையான முன்னேற்றத்தையும், ஆரோக்கியத்தையும் பெறுவதை உறுதி செய்வதற்காக எமது மருத்துவர்கள் குழு சாத்தியமுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இந்த தீவிர சிகிச்சையின் காரணமாக, குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியம் மற்றும் உணவு உட்கொள்ளலில் படிப்படியான மற்றும் நிலையான வளர்ச்சி இருப்பதை நாங்கள் கண்டோம். இந்த தாய்மார்கள் எங்களது குழு மீது வைத்திருந்த முழுமையான நம்பிக்கையின் காரணமாகவே இந்த சிகிச்சை சாத்தியமானது,’ என்று கூறினார்.
திருமதி பாத்திமா பங்களாதேஷில் குறைந்த வருவாயுள்ள எளிய பின்னணியைச் சேர்ந்தவர். இந்த சிறப்பு சிகிச்சையைப் பெறுவதற்கு ஏராளமானோர் மனமுவந்து நிதியுதவி செய்கிற க்ரௌடு பண்டிங் என்ற நிதிதிரட்டல் நடவடிக்கையின் வழியாக இப்பெற்றோர்கள் சிகிச்சைக்கான தொகையை சேகரிக்க மருத்துவமனை இவர்களுக்கு உதவியது. தற்போது துனியா மற்றும் பாத்திமா ஆகியோரின் குழந்தைகளது உடல்எடை முறையே 1.4 கி.கிராம் மற்றும் 1.8 கி.கிராம் என நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. முறையே 93 நாட்கள் மற்றும் 103 நாட்கள் தீவிர சிகிச்சைமுறையில் இம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதற்குப் பிறகு இக்குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.