பிராண்ட் அம்பாசிடர் சௌரவ் கங்குலியுடன் வெற்றிகரமான 10 ஆண்டுகளைக் கொண்டாடும் அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ

 

இந்தியத் துணைக் கண்டத்தில் வெற்றிகரமான பத்தாண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, உலகின் மிகப் பெரிய தலைமுடி மாற்றல், மீட்டெடுத்தல், தக்க வைத்தல் நிறுவனமான அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ, பிராண்டின் வெற்றிக் கதையைக் கொண்டாடும் வகையில் சென்னை ஐடிசி சோழாவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகப் பிராண்ட் அம்பாசிடரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சௌரவ் கங்குலி மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களான ஹர்பஜன் சிங்க் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் பங்கேற்றனர். கடந்த பத்தாண்டுகளாக இந்திய தலைமுடித் துறையை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ 2019இன் இலக்காகப் புறநகர் சந்தைகளில் தடம் பதிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிராண்ட் அம்பாசிடர் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் மத்தியக் கிழக்கு & இந்தியாவுக்கான சிஇஓ & எம்டி சங்கீத் ஷா 2019இல் மேலும் இரு அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோக்களைத் திறக்கும் பிராண்டின் விரிவாக்கத் திட்டங்களை விவரித்தார்.

பிராண்டுடனான அனுபவத்தையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் சீசன் தொடர்பான கருத்துக்களையும், பிராண்ட் அம்பாசிடரும் சிறப்பு விருந்தினர்களும் ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டனர். பிராண்ட் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பு குறித்துச் சௌரவ் கங்குலி கூறுகையில் ‘கடந்த பத்தாண்டுகளாக ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. தலைமுடி பாதுகாப்புத் துறையில் புதுமைக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்ற நிறுவனம் அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ. வெற்றிகரமான பயணத்துக்கும், எதிர்கால முனைவுகளின் வெற்றிக்கும் இக்குழுவை மனதாரப் பாராட்டுகிறேன்’ என்றார்.

அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோவின் மத்தியக் கிழக்கு & இந்தியத் துணைக் கண்டத்தின் சிஇஓ & எம்டி சங்கீத் ஷா பேசுகையில் ‘கடந்த பத்தாண்டுகளில் பிராண்டின் அசுர வேக வளர்ச்சியைப் பார்ப்பது ஊக்கமளிப்பதாக உள்ளது. எங்களுக்குக் கிடைத்துவரும் ஆக்கப்பூர்வ ஆதரவு காரணமாக புறநகர்ச் சந்தைகளிலும் தடம் பதிக்கப் போகிறோம். இந்தியத் தலைமுடிப் பாதுகாப்பு மற்றும் மீட்டெடுத்தல் துறையிடம் வளர்ச்சிக்கான கணிசமான ஆற்றல் இருப்பதுடன், சான்றளிக்கப்பட்ட தரமான சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கச் சில நிறுவனங்களும் இருக்கின்றன. தலைமுடி கொட்டுவது தொடர்பான சூழல்களை விளக்கவும், தலைமுடிப் பாதுகாப்புத் தீர்வுகள் குறித்த விழிப்புணர்வைச் சிறு சந்தைகளில் ஏற்படுத்தவும், பரீஷார்த்த முகாம்களுக்கு பிராண்ட் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது. இதுவரை தென் இந்தியாவில் 300 வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்ய 10 முகாம்களை நடத்தி உள்ளது.

அவர் மேலும் கூறுகையில் ‘எங்கள் பிராண்ட் மீது நம்பிக்கை வைத்து இன்னும் சிறப்பாகச் செயல்பட வைத்த அம்பாசிடர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. தலைமுடி கொட்டுதல் தொடர்பான சவால்களை எங்களது தரமான பொருள்கள் மற்றும் வித்தியாசமான அனுபவம் மூலம் அகற்றத் தீவிர முனைவுகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்’ என்றார்.

அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ தலைமுடியைத் தக்க வைக்கவும், மீண்டும் முடி வளரவும் விரிவான தீர்வுகளை வழங்குகிறது. ஸ்ட்ராண்ட்-பை-ஸ்ட்ராண்ட், ஃபிட்நெஸ் புரோக்கிராம், ஃப்ளாஷ் பாயிண்ட்ஸ் தொழில்நுட்பம், அட்வான்ஸ்ட் லேசர் தெராபி உள்ளிட்ட வித்தியாசமான மற்றும் பேடெண்ட் காப்புரிமை பெற்ற சிகிச்சை முறைகள், தலைமுடி கொட்டும் பல்வேறு நிலைகளுக்கான மிகச் சிறந்த தீர்வுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *