ராட்சத குளிர்சாதன பழ கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 13 நேரம் காப்பாற்ற போராடிய வீரர்கள்

ஆவடி அருகே   ராட்சத குளிர்சாதன பழ கிடங்கில் பழங்கள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பழ குவியல் நடுவே சிக்கியிருந்த வட மாநில தொழிலாளியை 13 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை ஆவடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ராட்சத குளிர்சாதன பழ கிடங்கு உள்ளது.இரண்டாயிரத்து ஐநூறு டன் கொள்ளவு கொண்ட இந்த கிடங்கில்   வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பில்,ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை இங்கு தேக்கி வைத்துவிட்டு பின்னர் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் 10 க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர் வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் கிடங்கில்  போர்க் லிப்ட் இயந்திர வாகனத்தின் மூலம் பழங்களை அடுக்கும் பணியில்  ஹாரிப்/23,ஜாருல்/24,சையது அக்/22,ஹயத்துல் அக்/20 ஆகிய நான்கு

ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பழ பெட்டி சரிந்தன.இதில் பணியில் இருந்த 4 பேரும் கிடங்கில் சிக்கி கொண்டனர்.பின்னர் கிடங்கின் வெளியே இருந்த தொழிலாளிகள் உள்ளே இருந்தவர்களை மீட்க போராடினார்.ஆனால் கிடங்கின் நுழைவாயில் முழுவதுமாக மூடியிருந்ததால் தொழிலாளிகளை மீட்க முடியவில்லை. பின்னர்   சுவற்றை துளையிட்டு மூன்று தொழிலாளியை மீட்டனர். ஆனால் எஞ்சிய ஒரு தொழிலாளி ஹயத்துல் அக்கை மீட்க முடியவில்லை. இதனை அடுத்து

காவல் துறையினருக்கும்,மீட்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்னை புறநகர்  மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலர் சரவணன் தலைமையில் பூவிருந்தவல்லி, ஆவடி,அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீட்பு படையினர் போராடினர்.

ஆனால் கிடங்கில் இருந்து பல டன் பழங்கள் சிதறி கிடந்ததால் ஹயத்துல் அக்கை மீட்க சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு பல்வேறு யுக்திகளை கையாண்டனர். ஆனால் அது பலன் அளிக்காததால் கிரைன் மூலம் நுழை வாயிலை உடைத்து பின்னர் விடிய,விடிய மீட்பு படையினர் போராடினர்.இறுதியாக காலை 9 மணியளவில் வட மாநில தொழிலாளியை பாத்திரமாக மீட்டனர்.இதனை அடுத்து மீட்கப்பட்ட தொழிலாளிக்கு முதலுதவி செய்து  சிகிச்சைகாக கே.எம்.சி. மருத்துவமனை அனுமதித்துள்ளனர்.இதனிடையே விபத்து குறித்து வருவாய் துறையினரும்,காவல் துறையினரும்  கிடங்கின் உரிமையாளர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து  அதிக எடை ஏற்றி வைக்கப்பட்டு இருந்தால் நடந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.அதேபோல் இந்த விபத்தில் 2 கோடி மதிப்பிலான 540 டன் எடையிலான பழங்கள் சேதமடைந்தது

(ஆவடி நிருபர் ராஜன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *