ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆடைகளை அறிமுகம்

 

சென்னை மே-02

சிறப்பு குழந்தைகளுக்கென நடத்தப்படும் இதுபோன்ற விளையாட்டு போட்டிகளின் மூலம் அவர்களுக்குள் தன்னம்பிக்கை உருவாக்க முடியும் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார் …

சிறப்பு ஒலிம்பிக்ஸ் (special Olympic) அமைப்பு சார்பாக சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 03 முதல் 6 வரை 3 நடைபெற உள்ளது..

இதில் பல்வேறு நாடுகளிலிருந்து சிறப்பு மற்றும் மாற்று திறன் கொண்ட 200 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுகான கலந்து கொண்டு விளையாடவுள்ளனர்….

இந்த சரவதேச அளவிலான கால்பந்து போட்டிகள் முழுக்க முழுக்க தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது…

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு தி.நகரிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகையும் சமூக ஆர்வலருமான வரலட்சுமி கலந்து கொண்டு சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆடைகளை அறிமுகம் செய்து வைத்தார்…

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி…

சிறப்பு பிரிவு குழந்தைகளை மன ரீதியாக எந்த நேரத்திலும் பிரித்து பார்க்க கூடாது என்றார். மேலும், சிறப்பு பிரிவு மாணவர்களை சரியான வகையில் ஊக்கமளித்தால் அனைத்துதுறைகளிலும் அவர்களாலும் சாதிக்கமுடியும் எனவும் மற்ற போட்டிகளை போல சிறப்பு ஒலிம்பிக்ற்கும் அனைவரும் ஒத்துழைப்பு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *