இறுதியில் டைய்ஸ் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை வருமானவரித்துறை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

ஒய்எம்சிஏ மெட்ராஸ் மற்றும் செயிண்ட் பால்ஸ் ரீக்ரியேஷன் கிளப் இன்னந்து தென்மண்டல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டிகளை எழும்பூரிலுள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது, கடந்த 22ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த ஆக்கி போட்டிகள் இன்று மே 01ல் நிறைவு பெற்றது…

இந்த போட்டிகளில் தமிழ்நாடு, பெங்களூரு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,புதுச்சேரி, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி, வருமான வரித்துறை அணி, ஜி.எஸ்.டி அணி, செண்ட் ஃபால் கிளப், தென்னக ரயில்வே என மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன…

12 அணிகளும் தலா மூன்று அணிகள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன…

இன்று மே 1ல் நடைப்பெற்ற இறுதி போட்டியில் டைய்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை வருமான வரித்துறை ஆகிய இரு அணிகளும் மோதின,
இறுதியில் டைய்ஸ் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை வருமானவரித்துறை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது…

இந்நிகழ்வில் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் பத்மபூஷன் எஸ்.ஆர்.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு கோப்பைகளையும், விருதினையும் வழங்கி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்…

முன்னதாக பேசிய பாஸ்கரன் இங்கு விளையாடிய ஒவ்வொரு அணிகளும் தம் திறமைகளை வெளிப்படுத்தியதாகவும் மேலும் அணியின் வீரர்கள் நன்கு பயிற்சி பெறவேண்டும் என்றும் அப்போதுதான் உலக ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் தற்போது சென்னைl ல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிலையில் ஆக்கி போட்டியை கான இவ்வளவு ரசிகர்கள் திரண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்…

மேலும் இந்நிகழ்வில் செயிண்ட் பால்ஸ் ரீக்ரியேஷன் கிளப்பின் செயலாளார் அலெக்ஸ் கார்னிலியல், ஒய்.எம்.சி.ஏ கமிட்டி தலைவர் B.ரவிக்குமார் டேவிட், ஜே.எரிக் கிரிஸ்டோபர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *