ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக சொல்லப்படுகிறது இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராயல் ஜூவல்லர்ஸ் , வட்டி இல்லா கடன் வழங்கி வந்துள்ளது

 

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடன் பெற்றுள்ளனர்
கடந்த சில மாதங்களாக தாங்கள் பெற்ற கடன் தொகையை செலுத்திவிட்டு தங்களுடைய நகைகளை திரும்ப கேட்டுள்ளனர்
அதற்கு உரிமையாளர்கள் நகைகளை உரியவரிடம் வழங்காமல் அடுத்த வாரம் அடுத்த மாதம் என இழுத்தடித்து தலைமறைவாகியுள்ளனர்

தாங்கள் நகைகளையும் இழந்து பணத்தையும் இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைமையகத்தை அணுகி தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கினார்
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது

ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக சொல்லப்படுகிறது இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
தலைநகர் சென்னையில் ஏற்கனவே தினந்தோறும் வழிப்பறி கொள்ளை திருட்டுகள் போன்ற குற்றச் செயல்கள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது இது போன்ற நிறுவனங்களில் பெரும் மோசடி மற்றொருபுறம் நடைபெற்று வருகிறது
ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
இதில் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்க முடியாது இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் இதுபோன்ற மோசடிகள் இனியும் நடக்காமல் இருக்க அரசாங்கமும் காவல் துறையும் நிதி நிறுவனங்கள் நகைக்கடைகள் உள்ளிட்டவைகளை கண்காணிக்க வேண்டும் இதுபோன்ற மோசடி குற்றங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *