49,585 சதுர அடியில் பணிமனையை திறந்தது ஸ்கோடா ஆட்டோ

49,585 சதுர அடியில்
பணிமனையை திறந்தது ஸ்கோடா ஆட்டோ
கோவை,மே.11-
ஸ்கோடா ஆட்டோவின் துணை நிறுவனமாக இந்தியாவில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஸ்கோடா ஆட்டோ இந்தியா செயல்படுகிறது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் ஆட்டோ மொபைல் துறையில் மிகவும் பழமையான நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் மிலாடா போல்ஸ்லேவ்வில் உள்ளது. ஸ்கோடாவின் 4 மாடல் கார்களான ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா ஆக்டோவியா, ஸ்கோடா ராபிட் மற்றும் ஸ்கோடா கோடியக் ஆகிய கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 64 விற்பனை மையங்கள் மற்றும் 62 சேவை மையங்களை கொண்டுள்ளது.
கோவை சௌரிபாளையம் ரோட்டில் இந்தியாவில் மிகப்பெரிய 49,585 சதுர அடியுடன் கூடிய பணிமனையை எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து ஸ்கோடா ஆட்டோ துவக்கியது. இந்த புதிய பணிமனையில் ப்ரீமியம் சேவை பகுதியுடன், 50 கார்கள் சர்வீஸ் செய்யும் வசதிகள் உடையது ஆகும்.
இந்த விழாவினை ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் விற்பனை, சேவை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் ஜாக் ஹோலிஸ், எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி எஸ்.அற்புதராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்தனர்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் விற்பனை, சேவை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர்ஜாக் ஹோலிஸ் பேசுகையில், `இந்தியா 2.0’ திட்டத்தில், அடுத்த 3 ஆண்டுகளில் 50 புதிய நகரங்களில் டீலர்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தென் பகுதியில் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கிலும் வலுவாக கால் பதிக்கும் நோக்கத்துடனும் ஸ்கோடா ஆட்டோ தனது புதிய பணிமனையை கோவையில் திறந்துள்ளது.
ஒரே சமயத்தில் 50 கார்களை நிறுத்தும் வசதியை கொண்டுள்ளது. இந்த பணிமனை ஆண்டுக்கு 20 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்யும் திறன் கொண்டுள்ளது. இதில் 40 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த புதிய பணிமனையை திறந்திருப்பதன் மூலம் எங்களது பிராண்ட் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். எங்கள் பிராண்ட் விற்பனையில் எங்களது பங்குதாரரான எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் உறுதிபட நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி எஸ்.அற்புதராஜ் பேட்டியளித்தபோது கூறுகையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியாவுடன் இணைந்து புதிய மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட பணிமனையை திறப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். சிறந்த சேவை கட்டமைப்பு மற்றும் உகந்த வணிக செயல்முறைகள் ஆகியவை ஈடில்லா சேவை அனுபவத்தை அளிக்கும். மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா கார்கள் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கும் உறுதி அளிக்கிறது என்று தெரிவித்தார். இந்தியாவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் அனைவரும் அணுகக் கூடிய வகையிலான திட்டங்களை ஸ்கோடா வழங்கி வருகிறது.
வாகன காப்பீடு, 24 x 7 சாலை உதவி திட்டம், நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவற்றை வழங்குகிறது. இவை, ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா ஆக்டோவியா, ஸ்கோடா ராபிட் மற்றும் ஸ்கோடா கோடியக் ஆகிய கார்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *