கோவில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பணேந்திர ரெட்டியிடம் புகார்

 

சென்னை மே-13

கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பணேந்திர ரெட்டியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது..

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் உள்ள பால சுப்பிரமணியன் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் உதவியாளர் தனஞ்ஜெயன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஞாயிறு என்ற ஊரில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்ததால் பொன்னேரி செல்லும் வழியில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தவர்கள் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர்…இச்சம்பவம் குறித்து சோழவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்….

இந்த தாக்குதல் சம்பலத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் இருக்கவும் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் பணேந்திர ரெட்டியிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்….

இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *