கக்கனின் குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டை காலி செய்யுமாறு தமிழக அரசு நோட்டிஸ்

 

மறைந்த முன்னாள்  அமைச்சர் கக்கனின் குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டை காலி செய்யுமாறு தமிழக அரசு நோட்டிஸ் கொடுத்துள்ள நிலையில் , கக்கன்  இல்லத்திற்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ் அழகிரி நேரில் வந்து அங்கு வசித்து வரும் கக்கன் மகன் குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

ஏற்கனவே நல்லகண்ணு வீட்டை காலி செய்து இருக்கிறார்.கக்கன் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்ய தயாராக இருக்கின்றனர் ஆனால் தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் விரைவில் அவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது செய்தித்தாளில் படித்தேன் அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கக்கன் மற்றும் நல்லகண்ணு அவர்கள் நாட்டிற்காக உழைத்தவர்கள் எனவே அவர்களுக்கு தமிழக அரசு இலவசமாகவே விரைவில் வீடு வழங்க வேண்டும்.

தமிழக முதல்வருக்கு இதற்கென அதிகாரம் உள்ளது அவர் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டுக்காக உழைத்த இரு குடும்பங்களுக்கும் இலவசமாக விரைவில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

சத்யமூர்த்தி பவனில் ஏற்கனவே காமராஜருக்கு சிலை உள்ளது அதன் அருகில் விரைவில் கக்கன் அவர்களுக்கு சிலை வைக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது இரு குடும்பங்களுக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி எல்லாவிதமான உதவிகளையும் செய்யவும் உடன் துணை நிற்கும்.

சந்திரசேகர் ராவ் தமிழகம் வருவது மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கவே எனவே மூன்றாவது அணி அமைக்க, பேச்சுவார்த்தை நடத்த வருகிறார் என்ற பேச்சுக்கே இடமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *