சீரடி ஸ்ரீ சாய்பாபா திருக்கோயில் துவாரகமாயி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
வடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா திருக்கோயில் துவாரகமாயி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
புதுவண்ணாரப்பேட்டை :சென்னை புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை ,அரசு அச்சக குடியிருப்பு பகுதியில் பிரசித்திபெற்ற சாய்பாபா திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடந்தது. மேலும் சச்சிதானந்த சத்குரு சாயி நாதர் திருக்கோயின் கோபுர விமானம் மற்றும் அருள்மிகு வினாயகர்,ஸ்ரீ கிருஷ்ணர்,ஸ்ரீ ஆஞ்சநேயர், குரு தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ நந்திக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பக்தி வெள்ளத்தில் கலந்து கொண்டு சாய்பாபா அருள் பெற வேண்டி குவிந்தனர்.