2019ம் ஆண்டிற்கான தனி நபர் நிதி ஒலிம்பியாட் விருது வழங்கும் விழா

2019ம் ஆண்டிற்கான தனி நபர் நிதி ஒலிம்பியாட் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

கல்லூரி மாணவர்களுக்காக நடை பெரும் உலகின் மிக பெரிய தனி நபர் நிதி ஒலிம்பியாட் தேர்வுகளை முன்னாள் ஐஐஎம் மாணவர் குழு வருடாவருடம் நடத்தி வருகிறது. இந்த வருடம் 6வது ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இளைஞர்களிடையே தனி நபர் நிதி பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு உருவாக்குவதற்காக இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 400க்கும் அதிகமான கல்லூரிகளில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க்கும் யூத் மணி ஒலிம்பியாட் தேர்வு உலகிலேயே மிகப்பெரிய சுயநிதி ஒலிம்பியாட் தேர்வாகும்.

கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் ஒலிம்பியாட் தேர்வுகள் 2 கட்டமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் முதல் 5 சதவீத இடங்களை பெறும் மாணவர்கள் மற்ற கல்லூரி மாணவர்களுடன் போட்டியிடுவார்கள். இந்த ஆண்டு ஒலிம்பியாட் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மணி விஸார்ட் நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரு.ஷ்யாம் சேகர், நிறுவனர், ஐதாட் நிறுவனம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

இது குறித்து திரு வெங்கடேஷ் வரதாச்சாரி, இணை நிறுவனர், மணி விஸார்ட் நிறுவனம் கூறுகையில், நம் நாட்டில் ஏராளமான திறமையான மாணவர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் இந்த ஒலிம்பியாட் தேர்வுகளில் ஐஐஎம் போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களை சேர்ந்த இளங்கலை கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஒலிம்பியாட் மூலம் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் வருங்கால இளைய தலைமுறையினரின் எதிர்கால நிதி தேவைகளை அறிந்து கொள்ள உதவுகிறது என்று கூறினார்.

இது குறித்து பேராசிரியர் தில்லை ராஜன், ஐஐடி மெட்ராஸ் கூறுகையில், இத்தகைய ஒலிம்பியாட் தேர்வுகள் மூலம் நாங்கள் இன்றைய இளைய தலைமுறையினரின் தனி நபர் நிதி தேவைகள் குறித்து நாங்கள் பெரிதும் அறிந்துக்கொள்ள முடிகிறது. இத்தகைய தகவல்களை நாங்கள் 60000க்கும் மேற்பட்ட தரவு புள்ளிகளில் இருந்து பெறுகிறோம். இந்த தரவு புள்ளிகள் மூலம் நிதி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மேலும் சிறந்த முறையில் தயாரிக்க முடியும் என்று கூறினார்.

2019ம் ஆண்டுக்கான ஒலிம்பியாட் தேர்வுகளில் புது தில்லியை சேர்ந்த மாணவர் திரு கவுரவ் ஆரோரா முதல் பரிசையும், ஐஐஎம் உதய்ப்பூர் மாணவர் அனிருத் தும்லூரி இரண்டாவது பரிசையும், ஐஐஎம் ரோதக்கை சேர்ந்த மாணவர் குல்தீப் சிங் மூன்றாவது பரிசையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரு.ஷ்யாம் சேகர், நிறுவனர், ஐதாட் நிறுவனம் விருது வழங்கி கவுரவித்தார்.

மேலும் பணஸ்தாலி பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் திரு ஹர்ஷ் புரோகித் அவர்களுக்கு நிதி கல்வியறிவு சிந்தனைத் தலைவர் விருதும் பேராசிரியர் திருமதி ரவீனா கோயல் அவர்களுக்கு ஆண்டின் சிறந்த தொழில் முனைவோர் விருதும் வழங்கி கவுரவிக்கப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *