9ஆம் ஆண்டு சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம்.
9ஆம் ஆண்டு சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம்.
தொழிலாளார் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபில் பங்கேற்பு.
சென்னை ஜுன் 15_ தழிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளார் இயக்கம் சார்பாக 9 ஆம் ஆண்டு சர்வதேச வீட்டு வேலை தொழிலாளார்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டு தொழிலாளர்களின் வாழ்வாதார திற்கான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
விலைவாசியின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம், வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு தனிச் சட்டம் , ஓய்வூதிய உயர்வு,
மேலும் சட்டத்திற்கு புறம்பாக வீட்டு வேலைக்கு குழந்தைகளை அனுப்பும் இடை தரகர்கள் களுக்கு மனித கடத்தல் கொத்தடிமைத் தொழில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, மஸ்தூர் கிஷான் சக்தி சங்கடன் அமைபின் நிறுவனத் தலைவர் நிதில் டே,, ஊடக வியலாளார் பீர் முகமது, விஎஸ்எம் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர் ஃபிரான்ஸ்னா வர்கீஸ் மற்றும் வீட்டு வேலைத் தொழிலாளார்ள் சங்க நிர்வாகிகள், மற்றும் தொழிலாளார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.