நடிகர் விஜய் 45வது பிறந்த நாள் விழா
நடிகர் விஜய் 45வது பிறந்த நாள் விழா . கண் பரிசோதனை முகாமில் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
சென்னை ஜுன் 22. நடிகர் விஜய் 45வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூர் கிழக்கு பகுதி சார்பாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் மஹாவீர் இண்டர்நேஷனல் சென்னை அறக்கட்டளையுடன் டாக்டர் .அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் நடைப்பெற்றது.
இம்முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை தளபதி விஜய் மக்கள் இயக்க எழும்பூர் கிழக்கு பகுதி தலைவர் டி.ராஜேஷ், மற்றும் மஹாவீர் இண்டர்நேஷ்னல் சென்னை அறக்கட்டளையின் சென்னை மண்டல தலைவர் எஃப்.சி.ஜெயின், செயலாளர், நிரஞ்சன், பொருளார் பிரகாஷ் ஜெயின் குலேச்சா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்