தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக மேலாளர்களுக்கான விழிப்புணர்வு
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக மேலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
எழும்பூர் :தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பான தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய நுகர்வோர்களுடனும், உணவு வணிகர்களுடனும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் சென்னையிலுள்ள உணவக விடுதி மேலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் (ரமடா) சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.A ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் அவர்கள் உணவக விடுதிகளில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,சட்டதிட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில்
சென்னையின் பல்வேறு உணவகங்களை சேர்ந்த உரிமையாளர்கள், மேலாளர்கள் திறளாக கலந்துக்கொண்டனர்.