ரெயில்வேக்கு இணையதள சேவை வழங்கும் ரெயில்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் புனீத் சாவ்லா வெளியிட்டுள்ள அறிக்கை

புதுடெல்லி,

இந்திய ரெயில்வேக்கு இணையதள சேவை வழங்கும் ரெயில்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் புனீத் சாவ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2016-ம் ஆண்டு மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் முதல் முறையாக இலவச வை-பை வசதி வழங்கப்பட்டது. அடுத்த 16 மாதங்களில் இந்தியா முழுவதும் 1,606 ரெயில் நிலையங்களில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த ரெயில் நிலையங்களில் 2.35 கோடி பேர் இலவச வை-பை வசதியை பயன்படுத்தி உள்ளனர். இந்த இலவச வை-பை சேவை எஞ்சிய 4,791 ரெயில் நிலையங்களுக்கும் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் இலவச வை-பை வசதி கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *