பக்கவாத நோய் சிகிச்சையில் முன்னோடியாகத் திகழ்கிறது

சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனை, பக்கவாத நோய் சிகிச்சையில் முன்னோடியாகத் திகழ்கிறது

சென்னை, ஜூன் 26 2019: குருதியோட்டக் குறை இதய நோய்களுக்கு அடுத்த படியாக இரண்டாவதாக பக்கவாத நோய், இறப்பு மற்றும் இயலாமைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து வசதிகளும் கூடிய மருத்துவமனையில் அந்த நோயாளி அவசர சிகிச்சை அறையில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அனுமதிக்கப்பட்டு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் பக்கவாத நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாஷ், சிக்கலான முறையில் பக்க வாதம் பாதித்த 4 பேருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளார். இந்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு துரோம்போலிசிஸ் (thrombolysis) எனப்படும் உறைவு சிதைவு முறையில் (clot lysing procedure) வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

எம். சதீஷ்குமார் (வயது 32), அருண் ராதாகிருஷ்ணன் (வயது 42), தீபக் குமார் நாயர் (வயது 40) மற்றும் ன். சரஸ்வதி (வயது 73) ஆகியோர் அண்மையில் பக்கவாத அறிகுறிகளுடன் சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இந்த மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் பக்கவாத நோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரபாஷ் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து அனைத்து நோயாளிகளையும் குணம் அடையச் செய்துள்ளனர். இன்ட்ராவேனஸ் துரோம்போலிசிஸ் (intravenous thrombolysis) என்ற நடைமுறை நோயாளிகளின் மூளை ரத்த நாளங்களில் ரத்தம் உறைவை சிதையச் செய்ய உதவுகிறது. மெக்கானிக்கல் துரோம்பக்டெமி (mechanical thrombectomy) என்பது பக்கவாத மேலாண்மையில் சிறப்பான முன்னேற்றத்தை அளித்துள்ள புட்சிகரமான நடைமுறை ஆகும். இந்த நடைமுறையில் அடைப்பு ஏற்பட்ட ரத்த நாளம் சிறிய தமனி நுழைவு மூலம் அணுகப்பட்டு ரத்த உறைதல் உடலியல் ரீதியாக அகற்றப்படுகிறது. இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை மீண்டும் கிடைக்கச் செய்து பக்க வாத அறிகுறிகளை தலைகீழாக மாற்றி குணம் அளிக்கிறது. இந்த சிகிச்சையை உரிய நேரத்தில் செய்தால் நோயாளிகள் முழு குணம் அடைவார்கள்.

பக்கவாத அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு விண்டோ பீரியட் (window period) எனப்படும் குறிப்பிட்ட முக்கியமான நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். துரோம்போலிசிஸ் நடைமுறைக்கான குறிப்பிட்ட நேரம் நான்கரை மணி நேரம் ஆகும். துரோம்பெக்டமிக்கான விண்டோ கால அவகாசம் 6 மணி நேரமாக இருந்தது. எனினும் குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு 24 மணி நேரத்திற்குள் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ளும் வகையில் அண்மையில் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விண்டோ பீரியட் எனப்படும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த 4 பேரில் மூன்று நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல முறையில் குணம் அடைந்துள்ளனர். வானகரம் அப்பல்லோ மருத்துவமனை, அண்மையில் அருகில் உள்ள மக்களின் வசதிக்காக அவர்கள் பக்கவாதம் மற்றும் இதர நோய்களுக்கு அவசர சிகிச்சை பெறுவதற்காக ஹாட்லைன் சேவையை அறிமுகம் செய்தது. அவசர சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் மருத்துவமனையில் உள்ள நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர் ஒருவர் நோயாளியுடன் ஹாட் லைன் மூலம் இணைக்கப்பட்டு, அந்த மருத்துவர் அவசர மருத்துவ உதவியை வழங்குவார்.

நான்கு நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்த வானகரம் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரபாஷ் கூறுகையில், “பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சமூக பொருளாதார நிலைகள் ஆகியவை மன அழுத்ததை அதிகரிக்கின்றன. மேலும் உணவு முறை மாற்றங்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவையும் அதிகரித்து வருகின்றன. இவை தொற்றா நோய்களால் (NON COMMUNICABLE DISEASE – NCD) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. குறிப்பாக பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை இவற்றால் கூடுகிறது. சென்னையில் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. எனவே இது குறித்து ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். இவற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் அருகில் துரோ்போலிசிஸ் மற்றும் துரோம்பெக்டமி சிகிச்சை முறைகளை பக்கவாத நோய்க்கு உடனடியாக மேற்கொள்ளும் சிகிச்சை மையம் குறித்தும் அறிந்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக பலர் பக்கவாத நோயின் தொடக்க அறிகுறியை கண்டுகொள்வதில்லை. மிகக் கடுமையான விளைவும் சேதமும் ஏற்பட்ட பின்னரே மருத்துவ உதவி நாடி வருகின்றனர். ஆரோக்கியான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை ஆகியவை மூலமாக பக்கவாதத்தைத் தடுக்க முடியும். ஆபத்தான காரணிகளை அறிந்து விவேகமான முறையில் செயல்பட்டால் 80 சதவீத பக்கவாதங்களைத் தடுக்க இயலும்.” என்றார்.

BE FAST என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பதத்தின் மூலம் பக்கவாத அறிகுறியை நினைவில் கொள்ள முடியும். B என்பது balance எனப்படும் நிலைத் தன்மை உடனடியாக இழப்பதாகும். E என்பது eye எனப்படும் கண்களில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகள். F என்பது facial asymmetry- அதாவது முகம் ஒத்திசைவின்றிப் போவது. A என்பது Arm weaknes – அதாவது கை அல்லது கால்கள் பலமிழப்பது. S என்பது difficulty in SPEAKING- அதாவது பேசுவதில் சிக்கல் ஏற்படுதல். T என்பது time எனப்பதும் நேரத்தைக் குறிக்கும். அதாவது பக்கவாத சிகிச்சை மேலாண்மைக்கான நேரத்தின் முக்கியத்துவத்தை இது குறிக்கிறது.

பக்கவாத தடுப்புக்கு சில வழிமுறைகள்:
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்தல், புகைப் பிடித்தலை தவிர்த்தல் (மறைமுகமாக புகையை ஏற்கும் passive smoking ஐயும் தவிர்க்க வேண்டும்), மது அருந்துதலைத் தவிர்த்தல், இதய நோய்கள் குறித்து தகுந்த மேலாண்மை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், நோய்க்குறியுடன் உள்ள அல்லது நோய்க் குறியுடன் இல்லாத கரோடிட் ஆர்டெரி டிசீஸ் (carotic arteric disease) எனப்படும் இதயத்தில் இருந்து மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ஒரு ஜோடி ரத்த நாளங்களில் உள்ள குறைபாடுகளை கண்காணித்து சிகிச்சை பெறுதல், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல், கொழுப்பு எனப்படும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்தல், ஆரோக்கியமான உணவு முறை, உடல் செயல் அற்று அல்லது உழைப்பு அற்று இருப்பதைத் தவிர்த்தல், தினசரி உடற்பயிற்சி, 30 முதல் 45 நிமிடங்கள் தினமும் விறுவிறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடை, நல்ல தூக்கத்தைப் பராமரித்தல் போன்றவற்றால் பக்கவாதத்தைத் தவிர்க்கலாம். சட்ட விரோத மருந்துகளைத் தவிர்த்தல், மன அழுத்தம் மற்றும் இறுக்கத்தை தவிர்த்தல் போன்றவற்றின் மூலமும் பக்க வாத ஆபத்தைக் குறைக்கலாம்.

ஒரு ஆய்வின் அடிப்படையில் பக்கவாதம் காரணமாக உலகில் ஆண்டுக்கு 57 லட்சம் பேர் இறப்பதாகவும் இந்தியாவில் மட்டும் 16 லட்சம் பேர் இறப்பதாகவும் தெரியவந்துள்ளது. பக்கவாதம் பாதித்த மூன்றில் ஒருவர் நிரந்தரமாக செயல் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி இந்தியாவில் கிராப்புறங்களில் ஒரு லட்சத்துக்கு 84 முதல் 262 பேரும் நகர்ப்புறங்களில் ஒரு லட்சத்துக்கு 334 முதல் 424 பேரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பக்கவாதம், நோயாளியை நிரந்தரமாக செயல் இழக்கச் செய்வதுடன் அவரை நிரந்தரமாக நடக்க

முடியாத வகையில் செய்துவிடும். மேலும் தகவல் தொடர்பில் சிக்கல், பார்வையில் தாக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

பக்கவாதம் பற்றிய தகவல்கள்:

பக்கவாதத்தில் 3 வகைகள் உள்ளன. அவை:
இஸ்கெமிக் ஸ்ட்ரோக் (ischemic stroke) எனப்படும் குருதியோட்டக் குறை பக்கவாதம் மூளையின் ரத்தநாளத்தில் அடைப்பு அல்லது உறைதல் உருவாவதால் ஏற்படுகிறது. ரத்த நாளத்தில் கொழுப்புப் படிவதால் தடைகள் ஏற்படக் கூடும். இந்தியாவி்ல் 80.2 சதவீதம் பேர் இந்த வகை பக்கவாதத்தால் தான் பாதிக்கப்படுகின்றனர்.

ஹீமோரகிக் பக்கவாதம் (HEMORRHAGIC STROKE) ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இது மூளையில் ரத்தம் கசிதலை உண்டாக்கும். இந்தியாவில் 17.7 சதவீதம் பேர் இந்த ஹெமோர்ஹேகிக் பக்கவாதததால் பாதிக்கப்படுகின்றனர்.

நிலையற்ற குருதியோட்டக் குறை பக்கவாதம் (transient isghemic stroke) என்பது சிறிய பக்கவாதம் அல்லது தற்காலிக பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது. ரத்த உறைவால் இது ஏற்படுகிறது. இது ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டும் ஏற்படும். மேலும் தற்காலிக அறிகுறிகளை இது காட்டக் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *