அமைச்சர் விஜயபாஸ்கர தி நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு சத்யா,மழை வரும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக
போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர தி நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு சத்யா,போக்குவரத்து துறைமுதன்மை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், மற்றும் ஸ்மார்ட் சிட்டி உயர் அதிகாரிகள் இன்று மாலை சென்னை தி நகரில் உள்ள பஸ்ஸ்டாண்டை ஆய்வு செய்தனர்,
செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் திரு எம் ஆர் விஜயா பாஸ்கர்,
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக, 33 பணிமனைகளில் 3,500 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில பணிமனைகள் பள்ளமான இடங்களில் இருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குகிறதை மாற்றி அமைப்பதற்கு கோரிக்கை வந்தது. அதன் அடிப்படையில் தியாகராயநகர் பணிமனையை புனரமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துறை செயலர் நிச்சயம் ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.
தியாகராய நகர் பேருந்து நிலையதை, வணிக வளாகம் போல், கீழ்தளத்தில் வாகன நிறுத்தம், மேல் தளத்தில் வணிக வளாகத்துடன் போன்ற வசதியுடன் கூடிய நவீன பேருந்து நிலையமாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் ஒரு முன்மாதிரி பேருந்து நிலையமாக அமைக்கப்படும்,
சென்னையில் 16 பேருந்து நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, பலவகைகளில் அதை புனரமைப்பதற்கான நவீனப்படுத்தும் போக்குவரத்து துறை வருவாய் ஏற்படுத்தும் வகையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கான நிதி ஸ்மார்ட் சிட்டி மூலம் ஒதுக்கப்படும். போக்குவரத்து துறை ஒரு சேவை துறை இதற்கு நிதி நெருக்கடி எப்பொழுதும் இருக்கும்.
இருந்தாலும் போக்குவரத்து துறையும் இப்பணிக்காக நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்,
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விபத்துக்களை தடுப்பதற்காகவும், கண்காணிப்பு செய்வதற்காகவும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் மேலும் தமிழகத்தில் this 4 தேசிய நெடுஞ்சாலைகளை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்,
2000 பேட்டரி பேருந்துகள் மற்றும் 12 ஆயிரம் BS6 பேருந்துகளும், அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
பள்ளிகளில் ஆரம்ப நிலையிலேயே மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் பேசி முதல்முறையாக ஒரு பள்ளியில் ஆரம்பிக்க உள்ளதாகவும் மேலும் இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்,