அன்னைதெரசா மகளிர் வளாகத்தில் நடத்தும் மகளிர் உயிர்ம தமிழ்நாடு வேளாண் சந்தை .
சென்னை வள்ளுவர் கோட்டம் .
அன்னைதெரசா மகளிர் வளாகத்தில்
நடத்தும் மகளிர் உயிர்ம தமிழ்நாடு வேளாண் சந்தை .
சென்னை ஜூன் 6 .
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் , மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு நலதிட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. . அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதிலுமுள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பெருட்களை சந்தைப்படுத்துதல் பணியிணை மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கங்களும், மாநில அளவில் தமிழ்நாடு மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மேற்கண்ட மாவட்ட சங்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல் படுத்தி வருகின்றது.
தற்போது இயற்கை வேளாண் பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்தல் மற்றும் அப்பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்திடும் நோக்கில் தமிழ்நாடு மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மாதந்தோறும் முதல் சனி ,ஞாயிற்று கிழமைகளில் மகளிர் உயிர்ம வேளாண் சந்தை என்றப் பெயரில் வேளாண் மகளிரின் விளைப் பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி நடத்தப் பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இம்மாதத்திற்கான மகளிர் உயிர் ம வேளாண் சந்தை ஜுலை 06.07.2019 மற்றும் 07.07.2019 ஆகிய தினங்களில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைப் பெறுகிறது..
இவ் விற்பனை கண்காட்சியில் மகளிர் தங்களது வேளாண் பொருட்களான கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள், அரிசி வகைகள், செடிகள், விதைகள், மர செக்கு எண்ணைய் ,சிறு தானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், மற்றும் நெகிழிக்கு மாற்றாக காகித பைகள் துணிப்பைகள் , பாக்கு மரப் பொருட்கள், மற்றும் பனை ஓலை பொருட்கள் விற்பனைக்கு உள்ளன ..
மகளிரை ஊக்குவிக்கும் வகையிலும், சென்னை போன்ற பெரு நகரங்களில் தரமான பொருட்கள் நியாயமான விலையில் உற்பத்தியாளரே நேரடி விற்பனை செய்யும் இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன் பெறுமாறு கொள்ளப்படுகிறது.