புலியூர்ஜும்மா பள்ளிவாசலில் மத நல்லிணக்க விருது வழங்கும் விழா
. மதம் மனிதனுக்கு மதம் பிடித்தவனாக மாற்றக்கூடாது- ஓய்வுபெற்ற நீதியரசர் கே என் பாஷா.
சென்னை கோடம்பாக்கம் புலியூர்ஜும்மா பள்ளிவாசலில் மத நல்லிணக்க விருது வழங்கும் விழா நடைபெற்றது .ஹாஜிஅமானுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் நீதிபதி கே. எல் .பாஷா மத நல்லிணக்க விருதுகளை மீனாட்சி மகளிர் கல்லூரி செயலாளர் லட்சுமி ,மீனாட்சி. சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி செயலாளர் முனைவர் முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் ஆகியோருக்கு வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் ஸ்ரீமத் சுவாமி அபவர்கானந்தர்.தமிழ் மையம் ஜெகத் கஸ்பர் ராஜ் ,லயோலா முன்னாள் கல்லூரி முதல்வர் ரெவரண்ட் அமல்தாஸ். தலைமை இமாம் உமர் ரிஜ்வான் ஜமாலி ஆகியோர் கலந்து கொண்டனர் கோடம்பாக்கம் புலியூர் ஜும்மா பள்ளிவாசல் ஹாஜி அஷ்ரப் அலி கான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.