ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்க ஆர்பி மற்றும் அப்போலோ மருத்துவமனைகள் இணைந்து செயல்படத் திட்டம்

 

உலகின் முன்னணி நுகர்வோர் ஹெல்த் & ஹைஜீன் நிறுவனம் பிரபல அப்போலோ குழுமத்துடன் இணைந்து

#ஹெல்தியர்இந்தியாடுகெதர் முலம் இந்திய சுகாதாரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முன்னணி பிராண்ட்களான ‘டெட்டால்’ பாதுகாப்பு மற்றும் ‘அப்போலோ’ ஆதரவுடன் அறிமுகமாகும் ‘ஆரோக்கிய ரக்ஷா’ திட்டம் இந்தியாவின் சுகாதாரக் குறியீட்டை மேம்படுத்த இணைந்து பணியாற்றும். ஆந்திராவிலுள்ள பள்ளித் தூய்மைத் திட்டம், சுகாதார மருத்துவமனைகள் மற்றும் சமூக ஊட்டச் சத்து மையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம் 2021இல் 60,000 மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளது,.

இந்த வித்தியாசமான கூட்டாண்மை தொற்று இல்லாச் சூழலை இயலச் செய்ய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான ஆதாரங்களை வழங்கும். கருவுற்ற தாய்மார்கள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், மூத்தவர்கள் ஆகியோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உள்ளூர் உணவுகள் மூலம் சமச்சீரான உணவை வழங்கச் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இது குறித்து அப்போலோ குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி ரெட்டி பேசுகையில் ‘ஆர்பி பன்னாட்டு நிறுவனத்துடனான வித்தியாசமான முனைவு மக்களுக்கான நோய்த் தடுப்பு முதல் சிகிச்சை வரையிலான விரிவான பாதுகாப்பை வழங்கும். இது முழுமையான சுகாதார நோக்கத்துக்கு உறுதுணையாக இருப்பதுடன் ஆரோக்கிய மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் உதவும். மக்களிடையே சுத்தத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் எங்கள் கூட்டாண்மை உதவும். 2013இல் அப்போலோ மருத்துவமனை விரிவான சிகிச்சை அளிக்கும் ‘முழுமையான சுகாதார முனைவு’ என்னும் திட்டத்தை ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டம், தவனம்பள்ளி மண்டலத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த முனைவின் ஒரு பகுதியாக 195 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குத் தடுப்புப் பாதுகாப்பு தொடர்பாக முறையான பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், வாழ்வியல் ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதன் காரணமாக நூற்றுக் கணக்கான மக்கள்,

குறிப்பாகப் பெண்கள் நீரிழிவு நோயிலிருந்து விடுபட்டதுடன், புற்றுநோய் காரணமாக இறப்பு விகிதமும் அதிசயிக்கும் வகையில் கணிசமாகக் குறைந்தது’ என்றார்.

ஆர்பி ஹெல்த் மத்தியக் கிழக்கு & தெற்கு ஆசியா (ஏஎம்இஎஸ்ஏ) மூத்த துணைத் தலைவர் கௌரவ் ஜெயின் கூறுகையில் ‘#ஹெல்தியர்இந்தியாடுகெதர் திட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்த உதவும் வகையில் ஆர்பி மற்றும் அப்போலோ மருத்துவமனை குழுமத்துடனான ஒப்பந்தம் பெருமை அளிக்கிறது. நாடு முழுவதும் தரமான சுகாதாரப் பாதுகாப்புக்கும், அதன் அணுக்கத்துக்கும் நடுவேயான இடைவெளிக்குக் காரணமான சுகாதார அமைப்பின் ஏற்ற இறக்கங்களை நிறைவு செய்யும் வகையில், இரு நிறுவனங்களும் ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. “டெட்டால்” பாதுக்காப்பு மற்றும் “அப்போலோ” ஆதரவுடன் அறிமுகமாகி உள்ள “ஆரோக்கிய ரக்ஷக்” திட்டம் ஆரோக்கிய இந்தியாவை உருவாக்க இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால் உருவாகும் சூழலையும், கிடைக்கும் ஆற்றலையும் காட்சிப்படுத்தும்’ என்றார்.

2000க்கும் அதிகமான ஆர்பி மற்றும் அப்போலோ குழும ஊழியர்கள் கூட்டாக இணைந்து ஆரோக்கிய உலகத்தை உருவாக்கத் தனிப்பட்ட தூய்மை உறுதிமொழியைத் தங்களுக்கும், குடும்பத்துக்கும் எடுத்துக் கொண்டனர்.

இந்த முழுமையான சுகாதாரப் பாதுகாப்பு அணுகுமுறை மூலம் இத்திட்டம் மிகப் பெரிய மதிப்புக் கூட்டாக விளங்குவதுடன், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் மிகச் சிறந்த பன்னாட்டு நடைமுறைகளை ஏற்கவும் அனுமதிக்கும். ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில், இதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
அரகோண்டாவிலுள்ள 5 மருத்துவமனைகள் ‘டெட்டால் பாதுகாப்பு & அப்போலோ ஆதரவு’ என்று பெயர் மாற்றப்பட்டு தொற்றில்லாச் சூழலைப் பயிற்சி மூலம் உருவாக்கிப் பராமரிக்கும்
மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான பிரத்யேக பயிற்சி மூலம் தொற்று இல்லா மருத்துவமனைகளைப் பராமரிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதிலும், தூய்மையை உறுதிப்படுத்தத் தொற்றுகளை அழிக்கும் எஸ்ஓபி-க்களைப் பயன்படுதுவதிலும் கவனம் செலுத்தும். தொடக்கத்தில் 25 மருத்துவர்களும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 மருத்துவர்களும் இத்திட்டத்தில் ஈடுபடுவர்.
சுகாதாரப் பாதுகாப்பு & மேம்பாடு, நோய்த் தடுப்பு, துப்புறவு, சமூகக் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை மூலம் ஆரோக்கிய மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்களுக்கு அளிப்பதே ஆரோக்கிய ரக்ஷாவின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *