தேவி கருமாரியம்மன் ஆலயம் புணரமைக்கப்ட்டு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை ஜூலை 15
ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என் தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் 44 = ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னிட்டு தேவி கருமாரியம்மன் ஆலயம் புணரமைக்கப்ட்டு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு நான்கு பூஜைகள் செய்யப்பட்ட கலச நீர் எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டபட்டடு
அங்கு திரளாக கும்பாபிஷேகத்தை காண கூடியிருந்த பக்தர்கள் மீது கலச நீர் தெளிக்கப்பட்டது, மேலும் இக்கும்பாபிஷேக விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் துணைவியார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தளர்..
பின்னர் கும்பாபிஷேக்கத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது…