திமுக வின் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என அன்புமணி ராமதாஸ் பேச்சு…
சென்னை ஜூலை 16
வேலூர் மக்களவைதேர்தலில் திமுக வின் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என அன்புமணி ராமதாஸ் பேச்சு…
பா.ம.க கட்சி கட்சியின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தியாகராய நகரிறுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சமூக நீதி, நீர் மேலாண்மை, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, மது மற்றும் புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உருவாக்கப்பட்ட இயக்கம் பா.ம.க. தொடர்ந்து மக்களுக்காக இந்த இயக்கம் பாடுபடும்.
வேலூர் தேர்தலில் நிச்சயமாக ஏ.சி சண்முகம் வெற்றி பெறுவார். பா.ம.க அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் எனவும்,
நாங்கள் கூறிய உண்மையை நம்பாமல், திமுக கூறிய பொய்களை நம்பி நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் அணியை மக்கள் தோல்வியடையச் செய்தார்கள். வேலூர் மக்கள் அந்த தவறை மீண்டும் செய்யமாட்டார்கள் என்றார்,
மேலும் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண பா.ம.க சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும்,
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள நீட் தேர்வுக்கும், எக்சிட் தேர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை. மாநிலத்திற்கேற்ப தேவைப்படுபவர்கள் தேர்வை நடத்திக் கொள்ளலாம் மருத்துவப் படிப்பிற்கு நீட் கட்டாயம் என்ற நிலமை மாறவேண்டும். அதற்காக பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தும் எனவும்,
புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை. இது ஜனநாயக நாடு கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்றார்…
கடந்த ஞாயிறு அன்று நடந்த தபால் துறைக்கான தேர்வில் தமிழில் வினாத்தாள் அளிக்கப்படாதது தவறு. தமிழ்நாட்டில் தமிழில் வினாத்தாள் அளிப்பது அவசியம். மீண்டும் தமிழில் ஒருமுறை இத்தேர்வை நடத்தினாலும் தவறில்லை என தெரிவித்தார்…