மாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை
*சென்னை அசோக்நகரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி*
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்… 5 பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் அமைச்சரிடமிருந்து மடிக்கணினியை பெற்றுக்கொண்டனர்..
மேலும் இந்த நிகழ்வில் விருகம்பாக்கம் எம்எல்ஏ ரவி மற்றும் தி.நகர் எம்எல்ஏ சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது… படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் வகையில் 3 லட்சத்தி 447 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை ஈட்டி விரைவில் அனைத்து தொழிற்சாலைகளும் தமிழகத்தில் வரவிருக்கிறது….
இதுவரையில் தமிழக அரசு சார்பில் 54 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது…
ஒரு சில பத்திரிக்கைகளில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்க்கை 2 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.. அது முற்றிலும் தவறு, இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக தான் சேர்க்கப்பட்டுள்ளனர்.. வருகிற ஆண்டில் கூடுதலாக 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்..
அது குறித்து இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் முழு புள்ளி விவரங்களோடு பட்டியலாக வெளியிட உள்ளேன்…
தனியார் பள்ளிகளுக்கு செல்லும் நிலை மாறி மாணவ மாணவிகள் அரசு பள்ளியை தேடி வரும் நிலை என்ற அளவிற்கு மாற்றியுள்ளோம்…
மலேசியா நாட்டோடு தொடர்பு கொண்டுள்ளோம்.. அந்த நாட்டில் உள்ள நிறுவனங்கள் நிதி உதவிகளை செய்வதாக கூறி உள்ளனர்..
விரைவில், 20 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக டேப் வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.. முதலமைச்சரை சந்தித்து ஒப்பந்தம் போட்டு, அதற்கு பிறகு இதற்கான பணிகள் நடைபெறும்…
மாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.. அங்கு பள்ளிகளுக்கு பதிலாக நூலகம் இயக்கப்படும்.. 1248 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவ மாணவிகளை உள்ளனர்… ஒரு ஆசிரியரின் மாத ஊதியம் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது.. இந்த நிலையில் ஒருவருமே இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து என்ன செய்வது…
மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட பிறகு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்…
ஒரு லட்சம் புத்தகங்கள் உள்ளது… மாணவ மாணவிகள் இல்லாத பள்ளிக்கூடங்களுக்கு இந்த புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நூல்கமாக மாற்றியமைக்கப்படும் இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்..