மருத்துவ உலகம் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற் கொண்டு அவ்வப்போது புதிய கண்டுபிடிப்பு

 

பெண்கள் குழந்தையின்மையாலும், பாலியல் பிரச்சினையாலும் துன்பபடுகின்றனர்.
இதற்கான தீர்வை மருத்துவ உலகம் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற் கொண்டு அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சேவையாற்றி வருகிறது.
இதில் முன்னோடியாக திகழும் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் கடந்த 24 ஆண்டுகளாக குழந்தையின்மைக்கான பிரச்சினைகளுக்கும், பெண்களுக்கான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு வருகிதது. தம்பதியரின் உடலுறவின் போது ஏறக்குறைய 90 சதவீத பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவதில்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே போல் ஒரு சில பெண்களுக்கு உடலுறவின் போது வலி ஏற்படுவதாகவும் அதனால் அவர்கள் தாம்பத்ய உறவுக்கே பயப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
இவையனைத்தும் சரி செய்யக் கூடியதேயாகும்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன், இனவிருத்தி மருத்துவம் தொடர்பாக அவ்வப்ளேது ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கங்களை ஆகாஷ் குழந்தையின்மைக்கான சிகிச்சை மையம் நடத்தி வருகிறது.

இதன் 7 வது சர்வதேச பெர்டிகான் கருத்தங்கம், ஜுலை 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை வடபழநி கிரீன் பார்க் ஒட்டலில் நடைபெறும்.
இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு மருத்துவ அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு, ஆய்வறிக்கையை அளித்து உரையாற்றுகின்றனர்.

இந்த இரண்டாம் நாள் கருத்தரங்கில் 28 ஆம் தேதி தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.

மேலும் ஐ.எஸ்.ஏ.ஆர் அமைப்பின் தலைவர் ஜெயதீப் மல்ஹோத்ரா, முன்னாள் தலைவர் ரிஷிகேஷ் டி . பாய் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
துவக்க விழாவின் போது ஜெயதீப் மல்ஹோத்ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
இது தா பிரபல மருத்துவ வல்லுநர்கள் ரேவதி ஜானகிராமன், சாந்த குமாரி, பாரதி தோர் பட்டீல், சுனிதா தன்டுல்வாட்கர், ரமணி தேவி, அஞ்சலாட்சி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

இக்கருத்தரங்கின் மற்றொரு சிறப்பம்சமாக இந்தியாவிலேயே முதன்முதலாக ” பெண்களுக்கென்றே பிரத்யேகமான நலப் பிரிவு துவக்கப்படுகிறது. இம்மையம் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் தொடர்ந்து செயல்படும். என்று மாநாட்டு தலைவர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி, செயலாளார் டி.காமராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *