நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டி, சென்னையில் தொடர் கருச்சிதைவினால் பாதிக்கப்படும் தம்பதியினருக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறது!

கருத்தரிக்க விரும்பும் தம்பதியினரிடையே, கருத்தரிக்க இயலாமை இன்று ஒரு முக்கியமான பொது பிரச்னையாக அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது உலகம் முழுவதிலும் கருத்தரிக்க முயலும் தம்பதிகளில் 10-15% பேர் கருத்தரிக்க இயலாமையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், கருத்தரிக்க இயலாத தம்பதியினருக்கு உடல், மனம், சமூகம் மற்றும் பாலியல் ரீதியிலான பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை கருத்தரிப்பு தொடர்ந்து தோல்வியில் முடிவது [Recurrent pregnancy loss] என்பதும் ஒரு இரண்டாம்நிலை கருத்தரிக்க இயலாமைதான் [secondary infertility] என வெகு சமீபத்தில் ’அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ரீப்ரொடக்டிவ் மெடிஸின்’ [American Society of Reproductive Medicine (ASRM)] மறுவரையறை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்–விட்ரோ ஃபெர்ட்டிலிசேஷன் எனப்படும் ஐவிஐ [in-vitro fertilization (IVF)] துறையில் நாளுக்குநாள் உண்டாகி வரும் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளினால், ‘ப்ரீ-இம்ப்ளாண்டேஷன் ஜெனெட்டிக் டெஸ்டிங்’ [pre- implantation Genetic testing] போன்ற நவீன மருத்துவ நடைமுறைகள், கருமுட்டைகளில் இருக்கும் குரோமோசோம் குறைப்பாடுகளைக் கண்டறிந்து, அதன் மூலம் உண்டாகும் தொடர் கருச்சிதைவுகளில் இருந்து தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தொடர் கருச்சிதைவிற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கும் போது சென்னை நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டியின் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணார் டாக்டர். கிருத்திகா தேவி [Dr Krithika Devi, Fertility Consultant, NOVA IVI Fertility, Chennai] கூறுகையில், ‘’முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் பெரும்பாலான கருச்சிதைவுகள் குரோமோசோம் அல்லது மரபணு குறைப்பாட்டால் உண்டாகுகின்றன. இவை வழக்கமாக நிகழ்பவை. அசாதாரமாண குறைப்பாடு முட்டை, விந்தணு அல்லது ஆரம்பநிலை கருமுடையிலிருந்து உண்டாகிறது. இத்தகைய சூழ்நிலையில் அதிநவீன மேம்பட்ட கருத்தரிப்பு ஆதரவு தொழில்நுட்பமான ’அசிஸ்டெட் ரீப்ரொடக்ட்டிவ் டெக்னாலஜி’ (ART – Assisted Reproductive Technology)-யின் ப்ரீ-இம்ப்ளாண்டேஷன் ஜெனெட்டிக் டெஸ்டிங் ஃபார் அனியுப்ளாய்டிஸ்’ (PGT-A Pre-Implantation Genetic Testing for aneuploidies) போன்ற நவீன மருத்துவ நடைமுறைகள் கருக்களை ஆராய்ந்து அறிந்து குரோமோசோம் குறைப்பாடுடன் இருக்கும் கருக்களை ஆரம்பத்திலேயே நீக்குவதற்கு உதவுகின்றன. மேலும் பாதிப்பு இல்லாத கருவைத் தேர்ந்தெடுப்பதால், தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது’’ என்றார்.

இத்தகைய பிரச்னைகளை கொண்டிருக்கும் தம்பதியினரில் ஒரு தம்பதி திரு. மற்றும் திருமதி ராஜேஷ் [வயது முறையே 39 மற்றும் 35]. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை அவர்கள் ஒரு ஆரோக்கியமான கருத்தரிப்புக்காக போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது மருத்துவ குறிப்புகளை ஆராய்ந்த போது, திருமதி.ராஜேஷ் ஐந்து வருடங்களுக்கு முன்பாக இரண்டு முறை கருச்சிதைவு அடைந்திருப்பது தெரிய வந்தது. திருமதி. ராஜேஷூக்கு மாதவிடாய் சுற்று ஒழுங்குகாக வந்திருப்பதும் கவனித்தில் கொள்ளப்பட்டது. மேலும் அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு மற்றொரு மருத்துவமனையில் சுயமாக ஐசிஎஸ்ஐ [self-ICSI] மேற்கொண்ட தகவலையும் பகிர்ந்து கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக இரண்டு கருவை உட்செலுத்தும் சுற்றையும் மேற்கொண்டிருக்கிறார்கள். அதில் முதல் சுற்றில், கருவை வைப்பது தோல்வியுற்றது. இரண்டாவது சுற்றில் கருத்தரித்த ஆறாவது வாரம் கருச்சிதைவு உண்டானது. கருவை உட்செலுத்த மேற்கொண்ட அந்த இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. இதனால் திரு. ராஜேஷ் டிஹெச்எல் [DHL -Diagnostic Hysterolaparoscopy] பரிசோதனையை மேற்கொண்டார். அதில் அவர் சாதாரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தங்களது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், ஐவிஎஃப் சிகிச்சைக்காக இத்தம்பதி சென்னையில் இருக்கும் நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டிக்கு வந்தனர். அவர்களுக்கு ஐசிஎஸ்ஐ இரண்டாவது சுற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இவர்களுக்கு ஏதாவது அசாதாரண குறைப்பாடுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய ஐசிஎஸ்ஐ முயற்சியை பிஜிடி-ஏ உடன் சேர்ந்து எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. ஐசிஎஸ்ஐ சிகிச்சையின் போது திருமதி. ராஜேஷின் சினைப்பையில் 16 கருமுட்டைகள் [oocytes] எடுக்கப்பட்டன. அவற்றில் வளர்ச்சியடைந்த நான்கு, ’ப்ளாஸ்டோசிஸ்ட் எம்ப்ரியோ’ [blastocyst embryos]-களாக உருப்பெற்றன. ஐந்தாவது நாளன்று, அந்த நான்கு கருக்களும் ’ப்ரீ-இம்ப்ளாண்டேஷன் ஜெனெட்டிக் டெஸ்ட்டிங் ஃபார் அனுப்ளாய்டிஸ்’ மருத்துவ நடைமுறைக்காக பயாப்ஸி செய்யப்பட்டன. பயாப்ஸியில் நான்கு ப்ளாஸ்டோசிஸ்ட்களில் ஒன்று மட்டுமே குரோமோசோம் குறைப்பாடுகள் இல்லாத கரு [euploid] என கண்டறியப்பட்டது. எனவே அந்த ஒற்றை கரு மட்டும் கர்ப்பபைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் திருமதி. ராஜேஷ் அதே சுற்றில் கர்ப்பமடைந்தார். கர்ப்பம் முழுமையாக தொடர்ந்தது. 3.3 கிகி எடையுள்ள ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். இதனால் அந்த தம்பதி அடைந்திருக்கும் அளவில்லா ஆனந்தத்தைப் போலவே நோவா குழுவும் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

ப்ரீ-இம்ப்ளாண்டேஷன் ஜெனெட்டிக் டெஸ்டிங் – அனியுப்ளாய்டி’ [Pre-implantation Genetic Testing – Aneuploidy ]
பிஜிடி-ஏ என்பது, ஐவிஎஃப் சுற்றின் போது கருக்களில் குரோமோசோம்கள் குறைபாடுகள் இல்லாமல் இருக்கிறதா என்பதை கண்டறிய உதவும் அதிநவீன மரபணு பரிசோதனையாகும். மேலும் இச்சோதனையில் ’ஜெனரேஷன் சீக்வன்சிங்’ [generation sequencing (NGS)] முறையைப் பயன்படுத்தி 46 குரோமோசோம் வகைகளையும் கண்டறியமுடியும். கருச்சிதைவு மற்றும் இம்ப்ளாண்டேஷன் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக அமையும் எம்ப்ரியோனிக் அனியுப்ளாய்டி [embryonic aneuploidy-க்கான வாய்ப்புக்களை இம்ப்ளாண்டேஷனுக்கு முன்பாகவே முற்றிலும் நீக்குவதற்கு இம்முறை பயன்படுகிறது. ஒரு அசாதாரணமான கருவை உட்செலுத்திய பிறகு செய்வதில் பெரும்பாலும் தோல்வியையே தழுவுகிறது. அல்லது இம்ப்ளாண்ட் செய்யப்பட்ட பின்பு அந்த கருத்தரிப்பானது பயோகெமிக்கல் கருத்தரிப்பு, கருச்சிதைவு, அல்லது கருத்தரிப்புக்கு பின் கரு இறப்பு அல்லது அசாதாரணமான குழந்தையாகவோ இருக்கும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. அதனால் கருப்பைக்கு கருக்களை உட்செலுத்துவதற்கு முன்பே இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஐவிஎஃப் சுற்றில், உருவான அனைத்து கருக்களையும் ஆராய்ந்தறிந்து அவற்றில் ’குரோமோசோமல் அனியுப்ளாய்டி’ [chromosomal aneuploidy] பாதிப்புகள் இல்லாதவற்றை மற்றும் தேர்ந்தெடுத்து உட்செலுத்தப்படுகிறது.

பிஜிடி-ஏ பலன்கள் –
கருத்தரிப்புக்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. அதேநேரம் கருச்சிதைவு மூலம் உண்டாகும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உண்டாகும் வேதனைகளையும், வருத்தங்களையும் வெகுவாக குறைக்க உதவுகிறது.
கருத்தரிப்புக்கு அவசியமான ஐவிஎஃப் சுற்றுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கருத்தரிப்புக்காக காத்திருக்கும் காலம் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதிக சுற்றுகளுக்கான செலவையும் குறைத்திருக்கிறது.
ஒற்றை கருமுட்டையை உட்செலுத்துவதில் பெரும் நம்பிக்கையை அளிப்பதோடு, இரட்டை அல்லது மூன்று குழந்தை கருத்தரிப்பினால் உண்டாகும் உடல்ரீதியான பிரச்னைகளைத் தவிர்க்க உதவுகிறது.

டாக்டர். கிருத்திகா தேவி மேலும் கூறுகையில், ‘’குரோமோசோம்களின் எண்ணிக்கையில் எந்த குறைப்பாடும் இல்லாத கருக்கள் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையின் பிறப்புக்கு வழிவகுக்கும். ஆகையால், நல்ல கருக்களுடன் முயற்சிக்கும் போது, பிஜிடி நுட்பங்களைப் பயன்படுத்தி, குரோமோசோம்களின் அடிப்படையில் நன்றாக உள்ள கருக்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம். இதனால் பின்னால் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் அல்லது உட்செலுத்த தகுதியில்லாத கருமுட்டைகளை நிராகரிக்கிறோம். இது நல்ல பலன்களை அளித்து வருகிறது” என்றார்.

நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டி கருத்தரிப்புக்கான மருத்துவ சேவைகளை அளிப்பதில் முன்னணியில் இருக்கும் மாபெரும் மருத்துவமனைகளில் ஒன்றாகும். மேலும் ஐவிஎஃப் முறையில் இதுவரையில் 25,000-க்கும் அதிகமான கருத்தரிப்புகளை வெற்றிகர்மாக மேற்கொண்டு சாதனைப் படைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *