சரக்கு மற்றும் சேவை வரி சங்கத்தின் பொதுகுழு கூட்டம்
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுகுழு கூட்டம் அரும்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது…
இந்த வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் வெங்கட கிருஷ்ணன், பொது செயலாளர் தித்தூஸ் சாமுவேல் சிறப்பு விருந்தினராக அஜித்குமார் ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட அச்சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் எராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களால் நேர்மையாய் வரி செலுத்துவோர் ஏமாற்றப்படுகின்றனர். இதன் காரணமாக வரிச்சுமை ஆவதுடன் மேன்மேலும் அரசு வரியை உயர்த்தும் சூழ்நிலைக்கு உள்ளாகும்.
தமிழகத்தில் வணிகர்கள் தங்களது தாய் மொழியை தவிர வேற்று மொழிகள் தெரியாத நிலையில் ,வட நாட்டு பணியாளர்களை நியமிப்பதால் அரசு நிறுவனங்களுக்கும் வணிகர்களுக்கும் ஒரு புரிதல் இல்லாமல் போகிறது. ஆகவே அரசுக்கு வர வேண்டிய வரவில் ஒரு தேக்க நிலை ஏற்படுகிறது. அது இந்திய அளவில் பொருளாதாரத்தை பாதிக்கும்.
ஆகவே எங்களின் வேண்டுகோளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.