7 வது சர்வதேச பெர்டிகான் கருத்தரங்கம் தொடர்ந்து 2 வது நாளாக சென்னையில் நடைபெற்று வருகிறது…
தமிழ் மொழியை அழிக்கும் முயற்சிகளை மத்திய அரசு கையாண்டு வருவதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
7 வது சர்வதேச பெர்டிகான் கருத்தரங்கம் தொடர்ந்து 2 வது நாளாக சென்னையில் நடைபெற்று வருகிறது…
குழந்தையின்மை சிகிச்சை மற்றும் பெண்கள் நலன் தொடர்பாகவும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் சர்வதேச கருத்தரங்கங்களை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் அவ்வப்போது நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 7 வது சர்வதேச பெர்டிகான் கருத்தரங்கம் ஜூலை 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது…
மாநாட்டு குழு தலைவர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி மற்றும் டாக்டர் டி.காமராஜ் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்…
இந்த மாநாட்டில் மருத்துவத்தின் நவீன முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்படுவதோடு ஒருவருக்கொருவர் தங்களின் சிகிச்சை முறைகள் குறித்து பகிர்ந்துக் கொண்டனர். குறிப்பாக இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கென்று பிரத்யேகமான பாலியல் நல மருத்துவ பிரிவு தொடங்கபட்டது. இந்த மையம் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் தொடர்ந்து செயல்படும் மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 நாள் கருத்தரங்கை தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்…
திமுக எப்போதுமே தமிழர்களின் நலன் சார்ந்தே போராடும் என்றும் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன் சார்ந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
தமிழ்மொழியின் தொன்மை குறித்து சர்சைகள் எழுந்து வரும் நிலையில் வல்லுனர்களின் கருத்துக்களை ஆராய்ந்து தமிழ்மொழி குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் தமிழ்மொழியை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து பல முயற்சிகளை கையாண்டு வருவதாகவும் அவர்களின் கனவை நிறைவேற்ற திமுக ஒருநாளும் வழிவிடாது என்றும் அவர் கூறினார்.