2109ம் ஆண்டுக்கான சர்வதேச உயர்தர குடிநீர் எக்ஸ்போவில் சிறந்த குடிநீருக்காக விருது பெற்ற கோமின்

 

2109ம் ஆண்டுக்கான சர்வதேச உயர்தர குடிநீர் எக்ஸ்போவில் சிறந்த குடிநீருக்காக விருது பெற்ற கோமின்
சென்னை, ஜூலை 2019: சீனாவின் குவாங்சோ மாகாணத்தில் நடைபெற்ற 2109ம் ஆண்டுக்கான சர்வதேச உயர்தர குடிநீர் எக்ஸ்‌போவில் இந்தியாவை சேர்ந்த கோமின் இயற்கை குடிநீர் சுவையான குடிநீர் தயாரிப்புக்கான வெண்கல விருதை பெற்றது. கோமின் இயற்கை குடிநீர், இந்தியாவின் பாட்டில் குடிநீர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சங்கேஷ்வர் வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தயாரிப்பாகும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்ற இந்த எக்ஸ்‌போவில் இந்தியாவில் இருந்து கோமின் குடிநீர் மட்டும் விருது பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். மகாராஷ்ட்டிராவின் அடர்ந்த மலைப்பகுதியான சயாத்ரி மலைத்தொடரின் இயற்கையான நீர்வளத்தில் இருந்து தயாரிக்கப்படும் கோமின் குடிநீர் சர்வதேச விருது பெற்று இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த நிகழ்வில் ரஷ்யா, ஜெர்மனி, பல்கேரியா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, கொரியா, இத்தாலி, ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு பிரிவுகளில் 2,200க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் பங்கேற்றன.
இதுகுறித்து திரு.விஜய் மானே, இயக்குநர், சங்கேஷ்வர் வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் கூறுகையில், 2109ம் ஆண்டுக்கான சர்வதேச உயர்தர குடிநீர் எக்ஸ்‌போவில் இந்தியாவை சேர்ந்த கோமின் இயற்கை குடிநீர் சுவையான குடிநீர் தயாரிப்புக்கான வெண்கல விருதை பெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்ற இந்த எக்ஸ்‌போவில் பல்வேறு பிரிவுகளில் 2,200க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் பங்கேற்றன. இத்தகைய மிகப்பெரிய நிகழ்வில் இந்தியாவில் இருந்து கோமின் குடிநீர் சர்வதேச விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. கோமின் இயற்கை குடிநீர் என்பது தூய்மையான குடிநீர் ஆகும், இது ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கிறது. இயற்கை கனிம நீரின் பயன்களை மக்களுக்கு அளிப்பதற்காக கோமின் குடிநீர் அறிமுகப்படுத்தப்பட்டது. புகழ்பெற்ற ஃபைன் வாட்டர் சொசைட்டியில் உறுப்பினராக இருப்பதால், கோமின் அமேசான், பிக்பாஸ்கெட், பிளிப்கார்ட் போன்ற பிரபலமான தளங்களில் கிடைக்கிறது, அத்துடன் இந்தியாவில் சிறந்த நட்சத்திர ஹோட்டல்கள், சிறந்த சுற்றுலா சேவைத் தொழில் மற்றும் ஜங்கிள் ரிசார்ட்ஸ் ஆகியவற்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீராகவும் உள்ளது.
மேலும் அவர் கூறுகையில், கோமின் இயற்கை மினரல் வாட்டரின் வழக்கமான நுகர்வு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தைப் பெறுகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோமின் FSMS ISO 22000, FSSAI, ISI மற்றும் தி ஃபைன் வாட்டர் சொசைட்டி ஆகியவற்றால் சான்றிதழ் பெற்றது. இப்போது இது உலகின் சிறந்த ருசியான குடிநீராகவும் அறியப்பட்டுள்ளது என்று கூறினார்.
சர்வதேச குடிநீர் எக்ஸ்போ 2019 குறித்து:
சீனாவின் குவாங்சோ மாகாணத்தில் நடைபெற்ற 2109ம் ஆண்டுக்கான சர்வதேச உயர்தர குடிநீர் எக்ஸ்போ, உயர்தர குடிநீர் தொழிற்துறையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உயர்தர குடிநீர் கலாச்சாரத்தை ஆதரிப்பதற்கும் மற்றும் உயர்தர குடிநீர் தயாரிப்புகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெறுகிறது. ஃபைன்வாட்டர்ஸின் படைப்பாளரும் வெளியீட்டாளருமான திரு. மைக்கேல் மஷ்சா, புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. மார்ட்டின் ரைஸ், பியூரலோகிகாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜான் ஜு, கொரியா சர்வதேச சம்மிலியர் சங்க தலைவர் முனைவர் ஜெய் யூன் கோ ஆகியோர் 2109ம் ஆண்டுக்கான சர்வதேச உயர்தர குடிநீர் எக்ஸ்போவில் நடுவர்களாக இருந்து விருதுகளுக்கான தயாரிப்புகளை தேர்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *