தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஹஜ் பெருநாள் (பக்ரீத்) பண்டிகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஹஜ் பெருநாள் (பக்ரீத்) பண்டிகை சிறப்பு தொழுகை வடசென்ன மாவட்டம் சார்பில் நடைப்பெற்றது. இத் தொழுகையில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என 3000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு தொழுகையை வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஏ.சாகுல் , செயலாளார் ஃபெரோஸ்கான், பொருளாளர் முஸ்தாக், துணைத் தலைவர் காஜா மொய்தீன், துணைச் செயலாளர் எம்.அன்சாரி, மருத்துவ அணிச் செயலாளர் சித்திக், வர்த்தக அணிச் செயலாளார் ஃபெரோஸ், மாணவரணிச் செயலாளார் சமீர், தொண்டரணிச் செயலாளார் ஷபிக் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.