சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையம்: இப்போது இன்னும் பெரியதாய்…. இன்னும் விசாலமாய்….

சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையம், ஆயுர்வேத மருத்துவத்தின் சாராம்சம் மாறாமல், அப்படியே ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்குவதில் பெயர் பெற்ற இந்நிறுவனம், தற்போது முகப்பேரில் மிகப்பெரிய, விசாலமான சிகிச்சை மையத்திற்கு மாறியுள்ளது. சஞ்சீவனத்தின் இந்த முகப்பேர் சிகிச்சை மையத்தை புகழ்பெற்ற பின்னணி பாடகி டாக்டர் பி.சுசீலா மற்றும் ஏ.வி.ஏ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ.வி.அனுப் [Dr. A.V.Anoop, Managing Director, AVA Group.]ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சஞ்சீவனத்தின் செயல்பாடுகள் பிரிவின் தலைவர். டாக்டர் நீது சென் எம்.டி [ஆயுர்வேதம்]. [Dr Neethu Sen, MD (Ay), Sanjeevanam operations Head] கூறுகையில், ‘’எங்களிடம் ஆயுர்வேத சிகிச்சைப் பெற வரும் மக்களிடமிருந்து கிடைத்துவரும் ஏகோபித்த ஆதரவு மற்றும் பெரும் வரவேற்பை தொடர்ந்து, சிகிச்சைப் பெறுபவர்களுக்கு இன்னும் செளகரியமாக சிகிச்சையளிக்க வேண்டுமென தற்போது முன்பை விட பெரிய, அதிக விசாலமான புதிய சிகிச்சை மையத்திற்கு மாறியிருக்கிறோம்.

இங்கு இடவசதி அதிகம் என்பதோடு, சிகிச்சைகான வசதிகளும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது ஏராளமான மக்கள் தங்கள் நோய்களுக்கு சிகிச்சைப் பெற ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளுக்கு திரும்பி வருவதை நாங்கள் கண்கூடாக காண்கிறோம். இதனால் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சிகிச்சைகளுக்கும் பெரும் வரவேற்பும். அவசியமும் உருவாக்கி இருப்பதை நாங்கள் காண்கிறோம்.” என்றார்.

சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையம் நோயாளிகளின் வசதிக்காக விசாலமானதாகவும், செளகரியமானதாகவும் சிகிச்சைப் பெறும் போது அமைதியான சூழலைக் கொடுக்கும் வகையில் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சை பெறுவதற்கு என தனித்தனியே சிகிச்சை அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சிகிச்சை மையத்தில், உடற்பயிற்சி சிகிச்சை [exercise therapy], யோகா மூலமான சிகிச்சை [therapeutic yoga], உணவுச்சத்து விகித ஆலோசனை [diet counselling], மற்றும் பாரம்பரிய யோகா வகுப்புகள் [regular yoga classes]. போன்ற சேவைகளுக்கான வசதிகளும் உள்ளன. இங்கு சிகிச்சைப் பெற வருபவர்களின் தேவைகளுக்கு ஏற்ப. அவர்களுக்கு அவசியமான அளவில் தனிப்பயனாக்கப்பட்ட மருந்துகள் ப்ரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன.
சஞ்சீவனத்தின் ஆயுர்வேத சிகிச்சை வியாதிகளுக்கு மட்டுமில்லாமல், ஆரோக்கியமான, நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும் சிறந்த வாழ்க்கை முறை நடைமுறைகளையும், பழக்கங்களையும் பின்பற்ற உதவுகிறது. இந்த மையம் வலி மேலாண்மை [Pain Management], தொழில்சார் உடல்நல பிரச்னைகள் [Occupational Problems], பருவகால உடல்நல பிரச்சினைகள் [Seasonal problems], உடல் ஆரோக்கிய சிகிச்சைகள் [Wellness treatments], தோல் மற்றும் முடி பராமரிப்பு மருத்துவமனை [skin and hair care clinic] மற்றும் வாழ்க்கை முறை மேலாண்மை [ lifestyle management] ஆகியவற்றிற்கான ப்ரத்யேக சிறப்பு சிகிச்சைகளை வழங்குகிறது. பிழிச்சில்’ [Pizhichil], ’ஷிரோதாரா’ [Shirodhara], ‘நாஸ்யம்’ [Nasyam], ’பஞ்சகர்மா’ [Panchakarma] உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவத்தின் அற்புதமான சிகிச்சைகளை சஞ்சீவனம் வழங்குகிறது. ஆயுர்வேத வைத்தியத்தில் தேர்ச்சி பெற்ற, அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஆயுர்வேத தெரபிஸ்ட்களின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் இந்த சிகிச்சை மையம் நடத்தப்படுகிறது.

முகப்பேரில் சஞ்சீவனம் ஆயுர்வேத மையம் திருவள்ளுவர் சாலை, பன்னீர்நகர், முகப்பேர். தி க்ராண்ட் ஸ்வீட்ஸ் எதிரே.. Thiruvalluvar Salai, Panneernagar, Mogappair, opposite to The Grand Sweets] அமைந்துள்ளது.
முன்பதிவு / சந்திப்புகளுக்கு, தயவுசெய்து (எம்) # 9176602599 என்ற அலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

சஞ்சீவனம் ஆயுர்வேத மருத்துவமனை, சமீபத்தில் தனது அதிநவீன வசதிகளை கொண்ட, முழுமையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கும் 110 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனையை கொச்சியின் கக்கநாட்டில் [Kakkanad] தொடங்கி இருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களின் மூலம் நோய் கண்டறியும் வசதிகள், யோகா, உடல் செயல்பாட்டுக்கான உடற்பயிற்சி [functional fitness], பிசியோதெரபி, இயற்கை மருத்துவம் [naturopathy] மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உணவுச்சத்து விகிதம் ஆலோசனை அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து ஆயுர்வேதத்தின் பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் தனித்துவமான சிகிச்சைமுறை அனுபவத்தை அளிக்கும் வகையில் சிகிச்சையளித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *