11 ஆம் ஆண்டு பால்க்குடத்திருவிழா வில் 500 ற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்…

 

சென்னை ஆகஸ்ட் 16

பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலையத்தின் 11 ஆம் ஆண்டு பால்க்குடத்திருவிழா வில் 500 ற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்…

சென்னை கண்ணம்மாபேட்டையில் அமைந்துள்ள வேம்புலி அம்மன் ஆலயத்தின் 5 ஆம் வார ஆடித் திருவிழாவை முன்னிட்டு பால் குடம் எடுக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது…

வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டி விரதமிருந்த 500 ற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இப்பால் குடம் எடுக்கும் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பால் குடங்களை பக்தர்களுக்கு எடுத்து தந்து துவக்கி வைத்தார்…

பின்னர் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்ற பக்தர்கள் வேம்புலி அம்மனுக்கு சாற்றி தங்களின் நேர்ந்தி கடனை நிறைவேற்றினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *