ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் ஆய்வு
தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்
ஏற்படுத்தப்படுவது குறித்து மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி
மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி
அவர்கள் ஆய்வு
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்
செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள், தமிழகத்தில் சென்னை
உள்ளிட்ட 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிப்
பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவது குறித்தும் மற்றும் அனைத்து
தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், கட்டட அனுமதி வழங்கும் நடைமுறைகளை
எளிமைப்படுத்துவது குறித்தும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களிடம் இன்று (19.8.2019)
பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள்
செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்
குறித்த அலுவலர்களுக்கான செய்முறை விளக்க கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
இக்கருத்தரங்கில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு
திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மழைநீர் சேகரிப்பு குறித்த
உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும்
முறைகள் குறித்த கையேட்டினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள்
செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் :
நிலத்தடி நீர் ஆதாரங்களை புனரமைத்து புத்துயிர் அளிப்பதோடு, நீர்த்தேக்கங்களை
மேம்படுத்தவும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தினை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா
அவர்கள் 2001-ல் தொடங்கினார்கள். இந்தியாவிலேயே மழைநீர் சேகரிப்புத் திட்டம்
செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கட்டட அனுமதி
வழங்குவதற்கு, அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு” கட்டமைப்பினை கட்டாயமாக
அமைக்க உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் கோவில் குளங்களை
புனரமைக்கவும், நீடித்த நீர் பாதுகாப்பு திட்டத்தினை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா