கூட்டுறவு இணையம் மற்றும் இந்தியன் கார்ப்பரேஷன் லிமிட்டெட் இணைந்து நடத்தும் பெட்ரோல் டீசல்
சென்னை சாலிகிராமத்தில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மற்றும் இந்தியன் கார்ப்பரேஷன் லிமிட்டெட் இணைந்து நடத்தும் பெட்ரோல் டீசல் சில்லைரை விற்பனை நிலையத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.
*அமைச்சர் மேடை பேச்சு*
மொத்தம் 42 பெட்ரோல் , டீசல் வழங்கு நிலையங்களை திட்டமிட்டு இன்று 30வது நிலையம் திறக்கப்பட்டுள்ளது இன்னும் தமிழகம் முழுவதும் 12 பெட்ரோல்,டீசல் வழங்கும் நிலையம் தயார் நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
துறை ரீதியாக ஆய்வு செய்து இவ்விடத்தில் கூட்டுறவு சங்கங்களின் வலுவான நிதி ஆதரத்திற்காக இதை பயன்படுத்தி வருகிறோம்
ஆட்சிக்கு வரவேண்டும் என சொல்லி கொண்டிருக்கும் ஸ்டாலின் தந்தை ஆட்சியில் நஷ்டத்திற்கு கொண்டு வந்தனர், அதிகாரிகளுடன் முறையாக ஒத்துழைப்பு இல்லாததினால் நிலை ஏற்பட்டுள்ளது,
இன்றைக்கு கூட்டுறவு துறை பன்முகபடுத்தப்பட்டு எழை எளிய மக்களுக்கு பயன் பெறும் வகையில் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் பயன்பெறும்படி திட்டமிட்டு செல்படுத்தியிருக்கிறோம்.
கிராமபுறத்தில் வட்டியில்லா கடனை விவசாய மக்களுக்கு வழங்கியுள்ளோம் , இதன் மூலம் வட்டிக்கு கடன் வாங்காமல் விவசாயம் செய்து பயன்பெறுகிறார்கள், இன்றைக்கு விவசாயிகள் தாமாகவே முன்வந்து கடளை செலுத்தி வருகிறார்கள் .இது ஜெயலலிதா அவர்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று அமைச்சர் பேசினார்.
*அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி*
சென்னை சாலிகிராமத்தில் கூட்டுறவுத் துறையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் இணைந்து பெட்ரோல் டீசல் வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இது கூட்டுறவுத் துறையின் துறையின் முப்பதாவது டீசல் வழங்கும் நிலையமாகும் . இதன் மூலம் ஆண்டுக்கு குறைந்தது 60 லட்சம் லாபம் இணையத்திற்கு வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக தொகையை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பட்டதற்கு காரணம், அத்திட்டத்தை சில காரணங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதில் சட்ட சிக்கல்கள் உள்ளது சில திட்டங்களை பயன்படுத்த முடியாத பட்சத்தில் நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் சூழல் ஏற்படும். இதில் தவறில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தை குறை கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். மயிரிழையில்தான் அதிமுக வெற்றியை பறிகொடுத்துள்ளது. சிறுபான்மையின மனதை மாற்றியதன் விளைவாகத்தான் திமுக வென்றது. தோல்விக்கு பாஜகவோ, அதிமுகவோ காரணம் இல்லை.
2005 க்கு பிறகு தற்போதுதான் பால் விலை ஏற்றப்பட்டுள்ளது. மக்களைப் பொறுத்தவரை தற்போதைய விலைவாசிக்கு பால் விலையேற்றம் என்பது சரிதான் என்று புரிந்து கொண்டுள்ளனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் மட்டுமே லிட்டருக்கு 32 ரூபாய் பால் உற்பத்தியாளர்களுக்கு தரப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக விலைவாசி ஏற்றத்தை விமர்சனம் செய்கிறார்கள். இவ்வாறு பேட்டி அளித்தார்.
போராட்டம் செய்தாவது மத்திய அரசின் அரசின் பார்வையை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்று திமுக முயற்சி செய்கிறது.