ஹூரோ எலக்ட்ரிக் நிறுவனம் இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் ஆகிய வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.

 

ஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் இஆர் என்ற பெயர்களில் இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை ஹூரோ எலக்ட்ரிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிவேக மற்றும் கனரக என்ஜின் கொண்ட இருசக்கர வாகனப் பிரிவை விரிவுபடுத்தும் வகையில் இந்தப் புதிய இருசக்கர வாகனங்களை ஹூரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆப்டிமா இஆர் வாகனம் ரூ.68,721 விலையிலும், என்ஒய்எக்ஸ் இஆர் வாகனம் 69,754 விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
இதுகுறித்து, ஹூரோ எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு ஷோஹிந்தர் ஹில் கூறியதாவது:-
எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தயாரிப்புகளை அளிப்பதன் நோக்கமாக இரண்டு தயாரிப்புகளை அளித்துள்ளோம். மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவலை இருப்பது தொடர்ந்து எங்களின் கவனத்துக்கு வரப்பெற்றது. இந்தக் கவலைகள் ஹூரோ மின்சார ஸ்கூட்டர்கள் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதாவது உயர்ந்த செயல் திறன் மற்றும் அதிகபயன்பாடு ஆகிய அம்சங்களை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாகனங்களில் உள்ள பேம் 2 உள்ளிட்ட அனைத்து அம்சங்களின் பயன்பாடுகளும் வாடிக்கையாளரிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.


தென் இந்தியாவில் தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் புதிய வணிகப் பிரிவு அலுவலகத்தை ஹூரோ நிறுவனம் தொடங்கியுள்ளது. ஹூரோ எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு இப்போது 615 சேவைப் பிரிவுகள் உள்ளன. இந்த எண்ணிக்கையானது வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்திடும் வகையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.700 கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்திட உள்ளது.
என்ஒய்எக்ஸ் இஆர் வாகன அறிமுகத்தைத் தொடர்ந்து, வர்த்தகப் பிரிவின் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் அதற்கான கனரக வாகனங்களை உற்பத்தி செய்திடவும் ஹூரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. வர்த்தகப் பிரிவிலான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலமாக குறைந்த முதலீட்டில் கார்பன் உமிழ்வே இல்லாத சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான நிலையை உருவாக்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை அதிகளவு தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை ஒட்டி, ஹூரோ எலக்ட்ரிக் நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், இப்போது வழக்கத்தில் உள்ள வாகனங்களுக்குப் பதிலாக அதிநவீன தொழில்நுட்ப ரீதியிலான இந்தியாவுக்குத் தேவைப்படும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க அதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் ஹூரோ எலக்ட்ரிக் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. குறைவான ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள் போன்ற நடைமுறைகளால் ஹூரோ எலக்ட்ரிக் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்வதுடன், அவர்களுக்கு எளிதாகவும் கிடைத்திடும்.
அதிவிரைவாகவும், கனமில்லாத அதேசமயம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வாகனங்களை இயக்க விரும்புவோருக்கு ஹூரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். முதலில் வாகனத்தை வாங்க நினைப்போருக்கும், மின்சார ஸ்கூட்டர்கள் மீது அளப்பரிய விருப்பம் கொண்டோருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நல் வாய்ப்பாக அமைந்திடும். புதுமுக வாகனங்களை உற்பத்தி செய்யும் இடத்தில் ஹூரோ எலக்ட்ரிக் நிறுவனம் தொடர்ந்து அதற்குரிய இடத்தை தக்கவைத்து, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும்.

V. #BALAMURUGAN 9381811222

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *