டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி

வாகன தொழில்துறையை மேம்படுத்த
டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது

* உலகம் முழுவதிலுமிருந்து 150 நிறுவனங்கள் அரங்கங்கள் அமைப்பு
* `மொபிலிட்டி துறையில் இந்தியாவின் எதிர்காலம்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கு
* 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்கிறார்கள்

சென்னை, அக் 2019: டயர் மற்றும் வாகனத் தொழில் துறையில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை தொகுத்து வழங்கும் `டயர் எக்ஸ்போ’, `கேரேஜ் எக்ஸ்போ’ மற்றும் `ஆட்டோமோடிவ் ஆப்டர் மார்க்கெட் இந்தியா 2019′ பதிப்பு துவக்க கண்காட்சி ஆகியவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
.
வாகன தொழில்துறைக்கான ஆதாரம், உற்பத்தி, தொழில் பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆய்வு, சான்றிதழ், லேபிளிங், உரிமம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உபகரணங்கள், சரக்கு தளவாடங்கள் கையாளுதல், பட்டறை திட்டமிடல் மற்றும் ஆலோசனை என்னும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை ஒரே கூரையின் கீழ் இந்த கண்காட்சி கொண்டு வருகிறது. இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைக்க உள்ளன. இதில், `மொபிலிட்டி துறையில் இந்தியாவின் எதிர்காலம்’ என்னும் தலைப்பில் பெருநிறுவனங்களை சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் 20 பேர் பேச இருக்கிறார்கள். இந்த கண்காட்சியை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பார்வையிட இருக்கிறார்கள்.

வாகனத் தொழில்துறையின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்கும் தொலைநோக்குடன் இந்த கண்காட்சியை சிங்எக்ஸ் இந்தியா நடத்துகிறது. 7வது டயர் எக்ஸ்போ இந்தியா 2019, 3வது கேரேஜ் எக்ஸ்போ 2019 மற்றும் `ஆட்டோமோடிவ் ஆப்டர் மார்க்கெட் இந்தியா 2019′ பதிப்பு துவக்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை சிங்எக்ஸ் இந்தியாவுடன் இணைந்து வாகன டயர் உற்பத்தியாளர் சங்கம், அகில இந்திய வாகன பட்டறைகள் சங்கம், இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கம் மற்றும் வாகன திறன் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன. லாபம் நிறைந்த இந்திய வாகன சந்தையில் முதலீடு செய்வதற்கும் நிறுவனங்களுக்கு சிறந்த வணிக தளத்தை ஏற்படுத்தி தருவதையும் இந்த கண்காட்சி முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. சமீபத்திய மற்றும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்துவதன் மூலம் அது இந்திய வாகன துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், எதிர்கால தொழில்துறை போக்குகள், சந்தை நுண்ணறிவு மற்றும் இந்திய ஒழுங்குமுறை கட்டமைப்பு உள்ளிட்ட சவால்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். இந்த கண்காட்சி வாகன தொழில்துறையின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் வாங்குபவர்கள், விற்பவர்கள், சேவை வழங்குனர்கள் மற்றும் கொள்முதல் நிபுணர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கிறது. மேலும் அவற்றிற்கான புதுமையான தீர்வுகள் மற்றும் யோசனைகள், வணிக செயல்பாடுகள், சந்தை உத்திகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதோடு, புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஏற்கனவே உள்ளவர்களுக்கும் புதிதாக வாங்குபவர்களுக்கும் வழங்குகிறது.

உலக அளவிலான வாகன தொழில் துறையில் சென்னை நகரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் உலக அளவிலான வாகன தொழில் துறையின் மிகப்பெரிய மையமாக சென்னை இருக்கும். இந்த கண்காட்சியில் 150 அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், 20க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் வாகன பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல், உதிரிபாகங்கள் மற்றும் சந்தைக்கு பிறகான, டயர், பழைய டயர்கள் சீரமைப்பு, டயர் சர்வீஸ், டயர் மூலப்பொருள் மற்றும் துணை தொழில் நிறுவனங்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

இதில் இந்தியாவில் டயர் தொழில்நுட்பம் – அதன் மீதான தற்போதைய, எதிர்கால பார்வை மற்றும் புதிய டயர், பழைய டயர்களை சீரமைத்தல், புதிய கார்களின் பாதுகாப்பு டிஜிடைசிங் வாகன தொழில் சந்தை, மின்னணு வணிக தளம் மற்றும் எலக்ட்ரிக் கார்களின் எதிர்காலம் ஆகியவை குறித்தும் பேசப்பட உள்ளன.

இந்த கண்காட்சி குறித்து சிங்எக்ஸ் இந்தியா நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவரும் பொது மேலாளருமான பல்தீப் சிங் கூறுகையில், டயர், கேரேஜ் மற்றும் வாகன சந்தைக்கு பிறகான தொழில்துறை ஆகியவற்றிற்கான எழுச்சி என்பது புதிய அரசாங்கத்தின் வாகன தொழில்துறை மீதான உந்துதலின் விளைவாகும். இந்த துறை வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்களிக்கும் தொழில் துறைகளில் ஒன்றாகும். வாகன தொழில் துறையின் சிறந்த இடமாக இந்தியாவை உருவாக்க, இந்த துறை வளர்ச்சிக்கும் சந்தைப்படுத்தலுக்கும் தேவையான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் தொழில்நுட்ப பட்டறைகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், இட வணிக பொருத்தம் மற்றும் போல்ட் விருதுகள் வழங்கும் விழா ஆகியவை இடம் பெற்றுள்ளன. வருடாந்திர `போல்ட் ஆட்டோமோடிவ் தொழில்துறை விருதுகள்’ இந்திய வாகன தொழில் தனி நபர்களின் கடின உழைப்பு, சிறப்பு மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள வாகன துறை உற்பத்தியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், ஊடகம் மற்றும் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோரை அங்கீகரித்து வழங்கப்படுகிறது.

நிருபர் மோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *