மின்சார வாரியத்தில் 20 ,000க்கு மேற்பட்ட களப்பணியாளர்கள் பதவி காலியாக உள்ளது

 

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் , தலைவர் எஸ்.மணிகண்டன், பொது செயலாளர் ஏ. சேக்கிழார், பொருளாளர் ஜெ.லூர்து பாஸ்டின்ராஜ், செயல் தலைவர் கே. செல்வராஜு , அமைப்புச் செயலாளர் எஸ். இராமநாதன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 10 , 000க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு , எலக்டிரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் தலைவர் எஸ்.மணிகண்டன் தலைமையில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் 27 . 09 . 2019 – ல் நடைபெற்றது .

மாநில பொருளாளர் ஜெ.லூர்து பாஸ்டின்ராஜ் , செயல் தலைவர் கே. செல்வராஜ் , அமைப்பு செயலாளர் எஸ். இராமநாதன் , பெடரேஷன் ஆலோசகர் ஆர். ஜெயராமன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 5000க்கு மேற்பட்ட கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஏ.சேக்கிழார் கூறியதாவது . ‘ மின்சார வாரியத்தில் 20 ,000க்கு மேற்பட்ட களப்பணியாளர்கள் பதவி காலியாக உள்ளது . பத்தாண்டுகளுக்கு மேலாக நிரந்தரமின்றி பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய மின்சார வாரியம் மறுக்கிறது . 5 , 1 . 98 க்கு பிறகு ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லையென கட் ஆப் தேதி நிர்ணயிக்கிறார்கள் . இந்த தேதியை 10 . 08 . 2007 என மாற்ற வேண்டும் , 2008ம் ஆண்டு விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பட்டியல் கேட்டபோது 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தவர்களை Labour Inspector உத்தரவு ஆதாரமாக எடுக்கப்பட்டது . தற்போது தொழிலாளர் நல ஆய்வாளர் ( Labour Inspector) உத்தரவு அளிக்கக் கூடாதென மின்சார வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது . இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக 480 நாட்கள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் . ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செயதிட எஸ்.இ ( SE) தலைமையில் கமிட்டி அமைத்து அடையாளம் காண வேண்டும் . 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கிட வேண்டும் . 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தவர்களுக்கு பணி நியமனம் செய்ய தொழிலாளர் நல ஆய்வாளர் (Labour Inspector) மற்றும் உயர் நீதிமன்ற ( High Court ) உத்தரவுகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்தி வேலை வழங்க வேண்டும் .கே 2 ஒப்பந்தப்பந்த (K2 , Chit Agreement ) பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்சார வாரியமே நேரடியாக ஊதியம் ரூ . 380 / – ( 22 . 2 . 2018 ஒப்பந்தப்படி ) வழங்கிட வேண்டும் . ஒப்பந்த தொழிலாளர் நிரந்தரம் குறித்து தொழிற்சங்கங்களோடு உடனடியாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும் . பேச்சு வார்த்தை நடத்திட மறுத்தாலோ , காலதாமதம் செய்தாலோ தொழிற் சங்க ரீதியான அடுத்த கட்ட நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *