திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி நகைகள் கொள்ளை
திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி நகைகள் கொள்ளை…
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் லலிதா ஜூவல்லரி ஷோரூம் உள்ளது. இன்று காலை 9 மணியளவில் முன்பக்க கதவை பணியாளர்கள் திறந்து பார்த்த போது அதன் கீழ் தளத்தில் உள்ள நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பதற்றத்துடன் பார்த்த போது பின்புற சுவரில் ஓட்டை போடப்பட்டு அதில் இருந்து கடைக்குள் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிற்கான நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த ஷோரூம் 3 தளங்களை கொண்டது. கீழ் தளத்தில் முற்றிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மேல் தளத்திலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு எப்படியும் 13 கோடி ரூபாயாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் திருச்சியில் இந்த அளவிற்கு நகைகள் கொள்ளை போனது இல்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.