தொழில்நுட்பக் கல்லூரி 9வது பட்டமளிப்பு விழா

 

பி. எஸ். அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 9வது பட்டமளிப்பு விழா

சென்னை, அக்டோபர் 2019 : பி. எஸ். அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் 5ந் தேதி அக்டோபர் 2019 நடைபெற்றது. இதில் முனைவர் பட்டங்கள் உள்பட 1396 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் அளிக்கப்பட்டன. அதில் 379 முதுநிலை பட்டங்களும், 996 இளநிலை பட்டங்களும் அடங்கும். பட்டப்படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு இந்நாளில் நடைபெற பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில் இந்தியாவுக்கான கானா நாட்டு தூதரக அதிகாரி திரு மைக்கல் ஆரோன் நி நோர்டி க்யே, பி. எஸ். அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் வேந்தர் திரு அப்துல் குவாதிர் ஏ ரகுமான் புகாரி, துணை வேந்தர் டன் ஸ்ரீ டத்தோ திரு பேராசிரியர் ஷகோல் ஹமித் பின் அபு பக்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. முக்தர் அப்பாஸ் நக்வி, பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி பேசினார். மேலும் அவர் பேசுகையில், இந்தியா மிகப்பெரிய அளவுக்கு மனித வள ஆற்றலை கொண்டிருக்கிறது 25 வயதுக்கு உட்பட்ட வலிமையான திறன் படைத்த 500 மில்லியன் இளைஞர்களை கொண்டிருக்கிறோம். இது உலக நாடுகளிலேயே மிக பெரியதாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் இந்திய இளைஞர்களின் சாதனைகள் நம்மை பெருமை கொள்ளத்தக்க இடத்தில் வைத்துள்ளனர். இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் எப்போதும் திகழ்கின்றன. பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானிகளை இந்தியா உருவாக்கி இருக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் இந்தியா மிகப்பெரிய வரலாற்றை கொண்டிருக்கிறது. சுதந்திர காலத்துக்கு பிறகு இந்தியா வெற்றிகரமான ஏராளமான விஞ்ஞானிகளை உருவாக்கி இருக்கிறது. பௌதீகம், அணு அறிவியல், விண்வெளி, கணிதம் என பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த விஞ்ஞானிகள் தங்களது பங்களிப்பை வழங்கினர். பல புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் வழியாக உங்களில் ஒருவர் கூட பழைய வரலாறுகளை திருத்தி எழுதக்கூடும். என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மிகச் சிறந்த இந்திய விஞ்ஞானிகள் உங்களுக்கு ஊக்க சக்தியாகவும், உங்களின் ஆக்க சக்தியாகவும் இருக்கட்டும். அவர்கள் உங்களது வாழ்வின் வழிகாட்டியாக திகழும் என்று பேசினார்.

பி. எஸ். அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியின் துணை வேந்தர் டாக்டர் சாகுல் ஹமீத் பின் அபு பக்கர் கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அவர் பேசுகையில், எங்களது கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆகச் சிறந்த கற்றல் மற்றும் கற்பித்தல் திறன்கள் கிடைக்கும் அளவுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம். கல்லூரியில் வழங்கப்படும் பாடத் திட்டங்கள் தொழில் ஆலைகளுக்கு தேவையாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கல்லூரி படிப்பின் இறுதி காலத்திலேயே அவர்கள் நல்ல வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியும். கடந்த 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 273 மாணவர்கள் கல்வியில் மிகச் சிறந்த மாணவர்களாக கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு ரூபாய் 8.6 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. திறம் வாய்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது. ஆசிரியர்களும் கண்டறியப்பட்டு அவர்களது சாதனைகளுக்காக ஊக்கப்படுத்த படுகின்றனர். எங்களது நிறுவனத்தை சேர்ந்த 70 ஆசிரியர்கள் அவர்களது கற்பித்தல் திறன் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் என்றார்.

இதன் பின், பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *