சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர் சான் வாட்சன் முன்னிலையில் சர்வதேச விளையாட்டுப் போட்டி
சென்னை #சூப்பர் #கிங்ஸ் நட்சத்திர #வீரர்
#சான் #வாட்சன்
முன்னிலையில் சர்வதேச விளையாட்டுப்
போட்டிகளில் சாதனை புரிந்த வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா.
சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர்
சான் வாட்சன்
முன்னிலையில் சர்வதேச விளையாட்டுப்
போட்டிகளில் சாதனை புரிந்த வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா.
ஆஸ்திரேலியாவின் கிரிக்செட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
நட்சத்திர விளையாட்டு வீரருமான சான்வாட்சன் 14.10.19,
திங்கட்கிழமை அன்று வேலம்மாள் வித்யாலயா மேல்அயனம்பாக்கம் பள்ளிக்கு வருகை
தந்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த வேலம்மாள் பள்ளி
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். சான் வாட்சன்
அவர்களைப் பள்ளி மாணவர்கள் நடனங்கள் ஆடியும், பூங்கொத்துக்களை வழங்கியும்,
இந்திய தேசியக்கொடி மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசியக்கொடிகளை அசைத்து
உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்கலையில் சிறந்த பல்கலைக்கழகமாய்த் திகழும் வேலம்மாள் பள்ளி
மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான சான் வாட்சன் அவர்களின்
வரைப்படத்தை வழங்கி சிறப்பித்தினர். ஆஸ்திரேலிய பாடலுக்கு நடனம் ஆடியும்,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடல்களைப் பாடியும் சிறப்பு செய்தனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் சான் வாட்சன்
சர்வதேச விளையாட்டில் சாதனை புரிந்த வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்
தொகையினை வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவின் முத்தாய்ப்பாக நவீன கிரிக்கெட்
ஆடுகளத்தைத் திறந்து வைத்தார் .மேலும் பல்கலையில் சிறந்த பல்கலைக்கழகமாய்த்
திகழும் வேலம்மாள் பள்ளி பல்கலை அரங்குகளையும் திறந்து வைத்து சிறப்பித்தார்.
மேலும் வேலம்மாள் வித்யாலயா, பூந்தமல்லி, வேலம்மாள் வித்யாலயா, மாங்காடு
பள்ளிகளுக்கு வருகை தந்து விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த வேலம்மாள்
பள்ளி மாணவர்களைப் பாராட்டினார்.
இவ்விழா மாணவர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், சர்வதேச சாதனைகளைப்
படைப்பதற்கு உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்தது.