மீனாட்சி இளநிலைக் கல்லூரியில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 88வதுபிறந்த நாள் விழா

 

 

மேற்கு கே.கே.நகர் வாணி வித்யாலயா மற்றும் மீனாட்சி இளநிலைக் கல்லூரியில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 88வதுபிறந்த நாள் விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியல் சிறப்பு விருந்தினராக செய்தி அலசல் நாளிதழ் வெளியீட்டாளரும் , ஆசிரியரும், அனைத்திந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவருமான லயன். டாக்டர் ராஜேந்திரன் திரைப்பட இசையமைப்பாளார் சி. சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டனர்.

இப்பள்ளியின் ஏழு வயதே ஆன இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் மோஹித் சாய் 50 கிலோ மீட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை அப்பள்ளியின் முதல்வர் வசுமதி ஸ்ரீநிவாசன் தொடக்கி வைத்தார்.

இப்பயணம் மூலம் மரம் நடுவோம் மரம் வளர்ப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
மேலும் ஒவ்வொரு மாணவரும் மரம் நட்டு பராமரிக்கும் வகையில் ஏ.பி.கே அப்துல் கலாம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதை போற்றும் வகையில் வாணி வித்யாலயா பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது.
சமூக ஆர்வலரும் வாணி வித்யாலயா பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியருமான குமார் மற்றும் வளர்ச்சி பாதையில் பசுமைத் தமிழகம் நிறுவனமும் இணைந்து 75000வது மரக்கன்றினை அப்பள்ளி வளாகத்தில் செய்தி அலசல் நாளிதழ் வெளியீட்டாளரும் ஆசிரியருமான லயன் டாக்டர் . ராஜேந்திரன் மரக்கன்றினை நட்டார். உடன் வசுமதி ஸ்ரீநிவாசன், உடற்கல்வி ஆசிரியர் குமார், ஆசிரியர்கள் மாணவர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *