எஸ்ஆர்எம் ல் சர்வதேச செப் தினம் கத்தார் நாட்டின் செப் கார்ஷியா  டி கியூ சன்சேஷ்  செப் தாமோதரன் உணவு தயாரித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.நிகழ்ச்சியில் 20ம் ஆண்டாக பிரமாண்ட கேக் தயாரிப்பு

 

 

எஸ்ஆர்எம் ல் சர்வதேச செப் தினம் கத்தார் நாட்டின் செப் கார்ஷியா  டி கியூ சன்சேஷ்  செப் தாமோதரன் உணவு தயாரித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.நிகழ்ச்சியில் 20ம் ஆண்டாக பிரமாண்ட கேக் தயாரிப்பு

சர்வதேச செப் தினத்தை முன்னிட்டு  எஸ்ஆர்எம் ஓட்டல் மேலாண்மை நிறுவனம்  நடத்திய ஆரோக்கியமான உணவு பணிகள் பற்றிய செயல் முறை நிகழ்ச்சியில் கத்தார் நாட்டின் செப் கார்ஷியா டி கியூ சன்சேஷ் கின்னஸ் புகழ் செப் தாமு என்கிற தாமோதரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பு உணவு தயாரித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.இதில் 20ம் ஆண்டாக பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்பட்டது.

அக்டோபர் 20ந்தேதி உலக தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி உலக செப் தினத்தை முன்னிட்டு காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஓட்டல் மேலாண்மை நிறுவனம் சார்பில் 14ந்தேதி முதல் 18 ந்தேதி வரை ஓட்டல் செப்களுக்கான உணவு தயாரித்தல் விரைவாக உணவு தயாரித்தல் ஆரோக்கியமான உணவு தயாரித்தல் சம்மந்தமான பல்வேறு போட்டிகள் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இதில் ரேடியன் எஸ்ஆர்எம் இன்டர்நேஷனல் ஹையாத் ரெசிடன்சி ஜிஆர்டி மெரியாத் ஐடிசி லீலா மனிப்பால் ரீகன்சி  உள்ளிட்ட 15   முன்னணி ஓட்டல்கள் மற்றும் எஸ்ஆர்எம் ஹாசன் சோனிபட் மோதி நகர் தரமனி ஆகிய இடங்களில் இயங்கி வரும் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து   35 செப்கள் பங்கேற்றனர்.

14ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு நிபுணர் மால்குடி கவிதா பங்கேற்று தென்னிந்திய உணவு முறைகள் பற்றி விளக்கி கூறினார்.15ந்தேதி விரைவாக உணவு தயாரித்தல் சம்மந்தமான போட்டி செப்புகளுக்கு நடத்தப்பட்டது.இதில்16 டீம்கள் பங்கேற்று விரைவாக உணவு தயாரித்து அசத்தி காட்டினர்.இதன் தொடர்ச்சியாக 16ந்தேதி கேட்ரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை கல்லூரிகளுக்கு இடையிலான சிறப்பான உணவு தயாரித்தல் சம்மந்தமான போட்டி நடத்லப்பட்டது.

17ந்தேதி எஸ்ஆர்எம் ஓட்டல் மேலாண்மை நிறுவனம் மற்றும் தென்னிந்திய செப் சங்கம் இணைந்து சர்வதேச செப் தின மாநாடு நடைபெற்றது.இதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவு நிபுணர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

இறுதியாக இன்று உலக செப்தின நிகழ்வு நடைபெற்றது. 16 ம் ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் ஓட்டல் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் டி.அந்தோனி அசோக்குமார் வரவேற்றார். தென்னிந்திய செப் சங்க தலைவர் முனைவர் செப் தாமு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தோகா கத்தார் நாட்டின் உணவு நிபுணர் செப் அந்தோனி கர்சியாடி கியூ சன்ஷே இந்திய செப் சங்க பொது செயலாளர் செப் செளந்தரராஜன் செப் ராமு பட்லர் செப் ஜீக்கேஷ் அரோரா   ஜிஆர்டி ஓட்டல்ஸ் தலைமை நிர்வாகி சீத்தாராம் பிரசாத்  சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் பங்கேற்று ஓட்டல் மேலாண்மை நிறுவனங்களின் சிறந்த மாணவ மாணவியர் 26 பேருக்கு பரிசுகள் வழங்கினார். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் மற்றும் மாணவ மாணவியர் இணைந்து 20ம் ஆண்டாக பழ வகைகளை கொண்ட பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் கேக் தயாரித்து அசத்தினர்.இறுதியில் எஸ்ஆர்எம் ஓட்டல் மேலாண்மை நிறுவன துணை முதல்வர் லலிதா ஶ்ரீ நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *