ஜெம் மருத்துவமனை நடத்தும் உடல்பருமன் அறுவை சிகிச்சை சர்வதேச மாநாடு ‘லேப்ரோபிட்#9’

 

 

 

ஜெம் மருத்துவமனை நடத்தும் உடல்பருமன்
அறுவை சிகிச்சை சர்வதேச மாநாடு ‘லேப்ரோபிட்#9’

ஆசிய பசிபிக் மண்டலத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்பு

சென்னை, 18 அக்டோபர் 2019 : இந்தியாவின் முன்னணி உடல் பருமன் அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோபிக், ரோபடிக் அறுவை சிகிச்சையில் முன்னணி மருத்துவமனையாக செயல்பட்டு வரும் ஜெம் மருத்துவமனை, ‘லேப்ரோபிட்’ 9வது சர்வதேச அறுவை சிகிச்சை மாநாட்டினை அக்டோபர் 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துகிறது. நிகழ்ச்சியை, தேசிய தேர்வுகள் வாரிய தலைவர் டாக்டர் அபிஜத் செத் துவக்கி வைத்தார். அகில இந்திய தனியார் மருத்துவ கல்லுரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் ராஜமுந்திரி ஜிஎஸ்எல் மருத்துவ கல்லுாரி தலைவர் டாக்டர் கானி பாஸ்கர ராவ் முன்னிலை வகித்தார்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, ஹாங்காங், சீனா, தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து உடல்பருமன் அறுவை சிகிச்சை சமுதாயத்தை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், உடல் பருமன் அறுவை சிகிச்சையில் கவனிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு கூறுகையில், ’’ உடல் பருமன் குறித்த மாபெரும் கருத்தரங்கான ‘லேப்ரோபிட்#9 நடத்துவதில் மிகவும் பெருமையடைகிறோம். இந்த கருத்தரங்கு எதிர்காலத்திற்கான அறுவை சிகிச்சை கல்வியாக அமைந்துள்ளது. ‘இதுவரை பேசாததையும் நாம் பேசுவோம்’ என்ற பொருளை மையமாக வைத்து கருத்தரங்கு நடத்தப்படுகிறது. பெரும்பாலான கல்வி நிலையங்கள் பேசாத நிகழ்ச்சிகள் பற்றி இதில் பேசப்படுகிறது. மேலும், நேரடி செயல்விளக்கமும் பயிற்சியும் கருத்தரங்கில் இடம் பெற்றுள்ளது,’’ என்றார்.

இந்திய உடல்பருமன் அறுவை சிகிச்சை கவுரவ செயலாளர் மற்றும் சர்வதேச உடல் பருமன் அறுவை சிகிச்சை சிறப்பு கூட்டமைப்பின் இந்திய பிரிவின் தலைவருமான டாக்டர் பிரவீன்ராஜ் பேசுகையில், “இந்த மாநாட்டின் நோக்கம், புதியவற்றை கற்றல் அனுபவம், அறிவு சார்ந்த புதியதாக அறிமுகமாகியுள்ள நுட்பங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொள்ள நடத்தப்படுகிறது. ஆசிய பசிபிக் மண்டலங்களில்

உள்ளவர்களை ஒருங்கிணைத்து, அறுவை சிகிச்சையின்போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒரு நிர்ணயம் செய்ய இந்த மாநாடு ஒரு சிறப்பான முயற்சியாக அமைந்துள்ளது. அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் சிக்கல்கள், இறப்புகளை குறைக்கவும், நீண்ட நாள் விளைவுகளை தவிர்க்கவும் பயிற்சி முறைகள் வகுக்கப்பட்டன” என்றார்.

லேப்ரோபிட்#9 கருத்தரங்கை நடத்தும் ஜெம் மருத்துவமனையை பாராட்டி டாக்டர் கனி பாஸ்கர ராவ் பேசுகையில், ’’ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக மட்டுமின்றி, உடல்பருமன் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள நான், தற்போது உடல் எடையிலிருந்தும் சர்க்கரை நோயிலிருந்தும் விடுபட்டுள்ளேன். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை அளித்த ஜெம் மருத்துவமனைக்கு எனது நன்றி’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *