மஷா புயல் காரணமாக தமிழக 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 

 

 

*ஆர்.பி.உதயகுமார்*

அரபிக் கடலில் உருவாகியிருக்கும் மஷா புயல் காரணமாக தமிழக 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்தும் புயல் மீட்பு பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேரிடர், மேலாண்மை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் எழிலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்

அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசுகையில் நேற்று இந்திய வானிலை துறை புயல் குறித்து தெரிவித்திருந்த நிலையில்

கன்னியாகுமரியை சேர்ந்த 12 படகுகளில் சென்ற மீனவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் 4 படகு மீனவர்களுக்கு புயல் குறித்த தகவல் மீன்வளத்துறை மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எஞ்சிய 8 படகுகளுக்கு கடற்படை உதவியுடன் பாதுகாப்பாக கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன

அதேபோல் நிலச்சரிவு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர் மழையின் போது கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

மழை நேரத்தில், செல்பி எடுப்பது,
தண்ணீர் தேங்கிய பகுதிகளில் செல்வது உள்ளிட்டவற்றை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தொடர் மழையின் போது அறிவிப்புக்கு காத்திருக்காமல் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீர் தேங்கிய இடங்களுக்கு செல்ல வேண்டாம், அதேபோல் குழந்தைகளை தண்ணீரில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.

*மஹா புயல் லட்சத்தீவு பகுதியில் நிலவி வருகிறது*
எனவே இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு வருவாய் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே தற்போது மஹா புயலால் நம் பகுதிக்கு பாதிப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.

பொதுமக்கள், தங்கள் இடம் குறித்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சிறிய சந்தேகம் ஏற்பட்டால் கூட நிவாரண முகாமில் போய் அவர்கள் தங்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.
அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.
அனைத்து கண்மாய்களிலும் தூர்வாரப்பட்டு நீர் தேக்கம் செய்ய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சரே நேரில் ஆய்வு நடத்தி உள்ளார்.

எனவே குடிமராமத்து பணி மூலம் அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

வருவாய் துறை முதன்மை செயலர் ககன் தீப் சிங் பேடி பேசுகையில்
பருவ மழை தொடங்கும் நிலையில் நவம்பர் மாத இறுதியில் சில மாவட்டங்களில் நெற்பயிற்கள்,மக்கா சோளம்,பருத்தி ஆகியவை அருவடைக்கு தயார் நிலையில் உள்ளதால் விவசாயிகள், பாதிப்புகள் ஏற்பட்ட பின் கடைசி நேரத்தில் பநிற்களை காப்பீட்டுக்கு பதிவு செய்யாமல், இப்போதே தங்கள் நிலங்களை பாதிப்புக்கு முன்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *