உலக சதுரங்கப் பெண் சாதனையாளர் மாணவி ரக்ஷித்தா ரவி அவர்களுக்குப் பாராட்டு விழா.

 

 

உலக சதுரங்கப் பெண் சாதனையாளர் மாணவி ரக்ஷித்தா ரவி
அவர்களுக்குப் பாராட்டு விழா.

14 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலக சதுரங்கப் போட்டியில் வேலம்மாள்
வித்யாலயா மேல் அயனம்பாக்கம் பள்ளியைச் சார்ந்த சர்வதேச சதுரங்கப் பெண்
சாதனையாளர் ரக்ஷித்தா ரவி உலகளவில் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார்.

வெற்றிப்பெற்ற மாணவிக்கு வேலம்மாள் வித்யாலயா, மேல் அயனம்பாக்கம் பள்ளியின்
சார்பில் 01.11.2019 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் பாராட்டு விழா
நடைபெற்றது.

பல்கலை விளையாட்டிற்கு ஓர் பல்கலைக்கழகமாய்த் திகழும் வேலம்மாள் கல்வி நிறுவனம் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரியும் சர்வதேச சாதனையாளர்களை
உருவாக்கி வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் வண்ணமாக வேலம்மாள் வித்யாலயா
பள்ளி மாணவி சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற பெண்
சாதனையாளர் ரக்ஷித்தா ரவி உலகளவில் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார்,

இவ்விழாவின் முத்தாய்ப்பாக 5000 மேற்பட்ட மாணவர்கள் உலக சதுரங்கப்
போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ரக்ஷ்த்தா ரவி அவர்களின் உருவம் பொறித்த
பேட்ஜ் அணிந்து வரவேற்றனர். மேலும் முப்பரிமாண வடிவத்தில் வெற்றி மங்கையின்
உருவப்படம் நிறுவப்பட்டு அவை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

வேலம்மாள்
பள்ளியின் வாயிலாக சாதனை மாணவி கடந்து வந்த பாதைகளின் சிறப்புகளைப்
பறைசாற்றும் குறும்படம் வெளியிடப்பட்டது.

வேலம்மாள் வெற்றி மங்கை ரக்ஷித்தா ரவி அவர்களின் கலந்துரையாடல்
மாணவர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், சர்வதேச சாதனைகளைப் படைப்பதற்கு
உற்சாகப்படுத்தும் வகையிலும் அமைந்தது. இவருடைய வெற்றிப் பயணம் மேலும்
சிறப்படைய வேலம்மாள் கல்வி குழுமத்தின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்
தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *