தர்ஷன் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பாக நடன நிகழ்ச்சி

 

 

சென்னை நவ-04

250-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை நடன நிகழ்ச்சி
பார்க்க ஏற்பாடு செய்த தர்ஷன் அறக்கட்டளை…

சென்னையில் தர்ஷன் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பாக நடன நிகழ்ச்சி மியூசிக் அகாடமி அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எஸ். சர்வோதயா அனாதை ஆசிரமத்தை சார்ந்த 250க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை வரவழைத்து இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏற்பாடு செய்தது….

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல திரைப்பட நடிகர்கள் பிரித்திவிராஜ் மற்றும் ரியாஸ் கான் கலந்து கொண்டு நடனமாடி அசத்திய மாணவர்களை பாராட்டினர், மேலும் இந்நிகழ்வில் அவ்வறக்கட்டளையின் நிர்வாகி சுரேஷ் ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நடன நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயினை கொண்டு இத்தொண்டு நிறுவனம் ஆதரவற்ற அனாதை குழந்தைகள் , பொதுமக்களுக்கு குறிப்பாக உணவு , உடைகள் என அடிப்படை தேவைகளை வழங்கி சேவை செய்து வருவதாக அவ்வறக்கட்டளையின் நிர்வாகி தெரிவித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *