மாடித்தோட்டம் அமைத்தல்,சுயதொழில் வாய்ப்புகள்-ஒருமாதகாலம்-பெண்கள் தொழில் முனைவோர்முகாம்

மாடித்தோட்டம் அமைத்தல்,சுயதொழில் வாய்ப்புகள்-ஒருமாதகாலம்-பெண்கள் தொழில் முனைவோர்முகாம்

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் ,இந்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை , தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியம், புது தில்லி, நிதியுதவி அளித்த ஒரு மாதம்“பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டமானது (WEDP)” 01.11.2019 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக டிஆர்கானிக் ஷாப்பி நிறுவனர் ஜெய
ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இவர் தனது சிறப்புரையில் பெண்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமானது, பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் அவர்களின் தொழில்களைத் தொடங்குவதற்கும், வளர்ப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக நடத்தப்படுகிறது. மேலும் கரிமமுறையில் மாடித்தோட்டம் அமைப்பது தொட்பாகவும், பெண்களிடையே இயற்கையாக உள்ள நிர்வாகத்திறனை வளர்த்துக்கொண்டு மிகச்சிறந்த தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இயக்குநரும் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழத்தின் இணைத்துணைவேந்தருமான முனைவர்.தி.பொ.கணேசன், ஐயா அவர்கள் அவர்கள் தலைமையில் நிகழ்வானது நடைபெற்றது மற்றும் SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர், முனைவர். பா.சிதம்பரராஜன் ஐயா அவர்கள் துவக்க விழாவில் முன்னிலையுரை வழங்கினார்.
SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் துணைமுதல்வர், முனைவர். ம.முருகன் அவர்கள் துவக்க விழாவில் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கணினி அறிவியல் பொறியியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் பா.வானதி அவர்கள் வரவேற்புரையாற்றினார். மேலாண்மையியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் இராதாகணேஷ் அவர்கள் நிகழ்வைப்பற்றிய அறிமுகவுரையாற்றினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் மற்றும் கணினிதுறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் கவிதா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் இளநிலை பட்டதாரிகள்,முதுநிலை பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களாக உள்ள 34 பேர் பங்கெடுத்து பயன்பெற்று வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *