AM TV 🙏எஸ்செம் கார்ப்பரேஷன் காஸ்மாஸ் – ஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம்

கோவையில் எஸ்செம் கார்ப்பரேஷன்
காஸ்மாஸ் – ஹைடெக் கிச்சன் மெஷின் அறிமுகம்

நிறுவனர் திரு. சதீஷ்குமார் நாயர் அறிமுகப்படுத்தினார்

கோயம்புத்துார், நவம்பர், 2019

 

எஸ்செம் கார்ப்பரேஷன், காஸ்மாஸ் பிராண்டில், ‘காஸ்மாஸ் குக்வொர்க் பிரைம்’ என்ற பெயரில் புதிய தயாரிப்புகளை வெளியிடுகிறது. இது, காஸ்மாஸ் குக்வொர்க்’ இயந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளாகும்.

எஸ்செம் கார்ப்பரேஷனின் தயாரிப்பான காஸ்மாஸ் குக்வொரக், உணவு தயாரிப்பு இயந்திரங்களில் துல்லியமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டவை. அமெரிக்காவில் விற்பனை செய்ய சான்றிதழ் பெற்றது. இந்தியாவில் காய்கறி, கிரேவி, இனிப்புகள் போன்ற பல்வேறு பொருட்களை சமைக்க வடிவமைக்கப்பட்டவை. அதிக அளவில் சமையல் செய்ய வடிவமைக்கப்பட்டவை. காஸ்மாஸ் குக்வொர்க், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து சந்தைகளுக்கு ஏற்றுமதியாகிறது. இஸ்கான் அமைப்பின் அட்சய பாத்திர பவுண்டேஷன், ரதோசமி டிரஸ்ட், மைக்ரோசாப்ட், எல் அன்ட் டி, ஸ்ரீஅன்னபூர்ணா, கூகுள், தலப்பாகட்டி பிரியாணி, ஏ2பி, கேஎம்சிஎச், ஜிகேஎன்எம், கிம்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், உணவு தொழிற்சாலைகள் மற்றும் ஸ்வீட் ஆட்டோமேஷன் வணிகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய மேம்படுத்தப்பட்ட உணவு தயாரிப்பு இயந்திரங்கள் குறித்து எஸ்செம் கார்ப்பரேஷன் நிறுவனர் திரு. சதீஷ்குமார் நாயர் கூறுகையில், ’’ உணவு, மக்களை மகிழ்விக்கிறது; இது நமது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக உள்ளது. உணவு சேவை தொழில் நிறுவனங்களுக்கு சேவை செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். சரியான கருவிகள், எளிதாக கையாளும் விதத்திலும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானவையாகவும், எரிபொருள் சிக்கனம் திறன்வாய்ந்தவையாகவும் இது இருக்கும். முக்கியமாக, பாரம்பரிய சமையலை போன்ற உணர்வை கொடுக்கும்,’’ என்றார்.

V. #BALAMURUGAN #9381811222

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *